கனி வகைகளில் முக்கியமான மூன்றாவது பழம் தான் இந்த வாழை ஆகும். வாழையடி வாழையாய் வாழ வேண்டும் என்ற பழமொழி உள்ளது. அது ஏனென்றால் வாழையை நாம் ஒரு இடத்தில் வைத்து வளர்க்கும் போது அதன் பக்கத்திலேயே மற்றொன்றும் வளர ஆரம்பிக்கும். இதுபோல் வளர்ந்து கொன்டே போகும். இதை தான் அப்படி சொல்வார்கள். வாழையில் பழம் மட்டுமல்லாமல் அதில் உள்ள அனைத்துமே மிகவும் பயன் தரக்கூடிய வகைகளில் ஒன்றாக விளங்கி உள்ளது.
இந்த வாழையில் பூ, காய், பழம், தண்டு மற்றும் இலை என அனைத்துமே நமக்கு நிறைய பயன்களை தருகின்றன. மேலும் இந்த வாழையில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளது. இது நமக்கு ஆரோக்கியத்தினை அள்ளித் தருகிறது. மேலும் இந்த வாழையில் நிறைய மருத்துவ குணங்களும் அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பதிவில் நாம் வாழையில் உள்ள பூ, காய், பழம், தண்டு, இலை மற்றும் தோல் போன்ற அனைத்து பொருள்களின் நன்மைகளையும் மற்றும் அதன் வரலாற்றையும் விரிவாக தெரிந்து கொள்வோம்.
வாழையில் உள்ள முக்கியமான பொருள்கள்
- வாழைப்பழம்
- வாழைப்பழத் தோல்
- வாழைப்பூ
- வாழைக்காய்
- வாழைத்தண்டு
- வாழை இலை
வாழைப்பழம்
வாழைப்பழம் ஆனது எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. இது நம் உடலின் ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் உள்ளதால் நமக்கு மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து வைக்கிறது. வாழைப்பழங்களில் அதிக கலோரிகள் உள்ளது. அதனால் நாம் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நம் உடலை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. இதில் செவ்வாழை மட்டும் உடல் எடையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பழம் ஆகும்.
இதனால் வாழைப்பழங்களில் உள்ள எல்லா வகை பழங்களும் நம் உடலின் எடையை அதிகரிக்கவும் மற்றும் குறைக்கவும் பயன்படுகிறது. மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற பல சத்துக்கள் ஏராளமாக இதில் அடங்கி உள்ளது. இந்த வாழைப்பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு மன அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் வரும் அபாயத்தினை குறைப்பதற்கு உதவுகிறது.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்
வாழைப்பழத்தில் உள்ள பழ வகைகள்
- பூவன்
- ரஸ்தாளி
- கற்பூரவள்ளி
- நேந்திரம்
- மொந்தன்
- பச்சை நாடன்
- மலை வாழை
- செவ்வாழை
பூவன்
இந்தப் பூவன்பழம் ஆனது சுமார் 7000 வருடங்களுக்கு முன்பே பயிரிடப்பட்டது. வாழைப்பழத்தில் மிகவும் சிறந்தது இந்த பூவன் பழம் ஆகும். மேலும் இதில் பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைய உள்ளது. இது நம் உடலின் தசைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் நம் உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும் இந்த பூவன் பழம் உதவி புரிகிறது.
ரஸ்தாளி
இந்த ரஸ்தாளி பலம் ஆனது குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. தினமும் அரை ரஸ்தாளிப் பழத்தை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இந்த ரஸ்தாளிப் பழத்தை நன்றாக பிசைந்து கரைத்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
கற்பூரவள்ளி
வாழைப்பதிலேயே மிகவும் இனிப்பானது இந்த கற்பூரவள்ளி பழம் ஆகும். இந்த பழமானது நம்முடன் உடலின் சூட்டை தணித்து நம் உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய கண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான நோயும் குணமாகிறது. மேலும் நம்முடைய உடல் நன்கு வலுப்பெறுகிறது.
நேந்திரம்
நேந்திரம் பழம் ஆனது மிகவும் சத்து மிக்க ஒரு பழமாகும். இந்த பழமானது நம் உடலின் இரத்த ஓட்டத்தை சீரமைக்க உதவுகிறது. மேலும் நம் உடலில் உள்ள மூளை உறுப்புகளை நன்றாக சுறுசுறுப்பாக செயல்பட இந்த பழம் உதவுகிறது. மேலும் ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் இந்த பழமானது ரத்த இசோகையினை குணப்படுத்துகிறது.
மொந்தன்
நம் சமையலுக்கு பயன்படுத்தும் வாழைக்காயை நன்றாக பழுக்க வைத்து பின் எடுக்கும் பழத்தை தான் மொந்தன் பழம் என்று அழைப்பார்கள். இந்த பழமானது நமக்கு மிகவும் குளிர்ச்சியை தருகிறது. இதில் அதிகளவில் சத்துக்கள் அடங்கி உள்ளது. மேலும் இந்த பழமானது நம் உடலில் உள்ள உணவை எளிதில் ஜீரணிக்க வைக்கும் தன்மை கொண்டது.
பச்சை நாடன்
பச்சை நாடன் பழமானது எல்லாம் மண்களிலும் மற்றும் கூட்டமாக வளர்க்க ஏதுவான பழமாகும். இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல வகையான சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள புண் குணமாகும். மேலும் அல்சர் பிரச்சனை உள்ளவருக்கு இந்த பழம் ஒரு பெரிய தீர்வாக உள்ளது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வரும் சோர்வை போக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது.
மலை வாழை
இந்த மலை வாழைப்பழம் ஆனது அளவில் சிறியதாகவும் மற்றும் சற்று உயரமாகவும் இருக்கும். இந்த பழத்தில் விதைகள் ஏதும் இருக்காது. அதனால் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் ஆகும். இந்த பழத்தினால் இரத்தசோகை குணமாகும். மேலும் இந்த பழமானது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்க பயன்ப்படுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் இந்த மலை வாழைப்பழம் பெருமளவில் உதவுகிறது.
செவ்வாழை
வாழைப்பழங்களில் செவ்வாழை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பழம் ஆகும். இந்த பழத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இதன் சிவப்பு நிறமானது நம் உடலின் இரத்த மண்டலத்திற்கும் மேலும் ஆண்மைக்கான ஊட்டச்சத்தையும் மற்றும் கண்களுக்கான ஊட்டச்சத்தையும் தருகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் உடையவர்களுக்கும் இந்த செவ்வாழை மிகவும் ஏற்ற பழமாக உள்ளது. இது நம்முடைய உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா
வாழைப்பழத் தோல்
வாழையில் உள்ள பொருள்களில் இந்த வாழைப்பழத் தோலும் நமக்கு நிறைய பலன்களை அள்ளித் தருகிறது. இந்த தோலானது நம் பற்களை வெண்மை அடையச் செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை நம் பற்களின் மீது தொடர்ந்து தேய்த்து வர பற்கள் முன்பை விட நன்றாக வெண்மையாக இருப்பதை உங்களால் காண முடியும்.
மேலும் நம் முகத்தில் வரும் பருக்கள், மருக்கள் போன்ற இடங்களிலும் இந்த வாழைப்பழத் தோலை நன்றாக தேய்த்து வர முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் மருக்கள் நீங்கி முகம் நன்றாக இருக்கும். மேலும் இந்த வாழைப்பழத் தோலானது நம் முகத்தில் மறுபடியும் பருக்கள், மருக்கள் வராமல் பார்த்துக் கொள்கிறது.
மேலும் வாழைப்பழத் தோலை பொதுவாகவே நம் முகத்தில் தொடர்ந்து தேய்த்து வருவதால் நம் முகமானது பளபளப்பாக மாறும். வாழைப்பழத் தோலை நம் முகத்தில் நன்றாக பிரவுன் கலர் வரும் வரை தேய்க்க வேண்டும். பின்னர் அதன் பின் சுடு தண்ணீரால் கழிவினால் முகம் நன்றாக பளபளப்பாக மாறுகிறது. மேலும் இந்த தோலானது நம் கண்ணில் உள்ள கருவளங்களை நீக்குகிறது. வாழைப்பழத் தோலை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து நம் கண்ணைச் சுற்றிலும் தேய்த்து அப்படியே சுமார் 20 நிமிடம் வைத்து பின்னர் குளிர்ந்த நீறினால் கழுவினால் முகத்தில் உள்ள கருவளையம் மறைந்து போகும்.
மேலும் இந்த வாழைப்பழத் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டப்பாவில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த வாழைப்பழத் துண்டுகளை போட்டு நன்றாக மூன்று நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த டப்பாவை எடுத்து அதில் உள்ள தண்ணீரை நன்றாக வடிகட்டி அந்த நீரை செடிகளுக்கு ஊற்றுவதன் மூலம் செடிகள் நன்றாக வளரும்.
மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்
வாழைப்பூ
வாழை மரத்தில் வாழைக்காய் போக எஞ்சிய பகுதி தான் இந்த வாழைப்பூ ஆகும். இது சந்தையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். ஆனால் இந்த வாழைப் பூவினை சுத்தம் செய்வது சற்று கடினம் ஆகும். இதனால் வாழைப்பூவை வாங்குவதை மக்கள் அதிகமாக தவிர்க்கின்றனர். இருந்தாலும் இந்த வாழைப்பூவில் ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது. இந்த வாழைப்பூவை நாம் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வர நம்முடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. வாழைப்பூவில் நிறைய மருத்துவ குணங்களும் அடங்கி உள்ளது. மேலும் நம் உடலில் சீதபேதியை கட்டுப்படுத்துகிறது. நம் வாயில் உள்ள வாய்ப்புன்னை நீக்கி மேலும் வாய் நாற்றத்தையும் நீக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு.
மேலும் நம் உடலில் அணிமியா எனப்படும் இரத்த சோகையினை குணமாக்க இந்த வாழைப்பூக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உண்டான மாதவிடாய் பிரச்சினையை குணமாக்குகிறது. மேலும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களும் இந்த வாழைப்பூவை எடுத்துக் கொள்ளலாம். மேலும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. நம் உடலின் எடையை குறைக்கவும் மற்றும் நம் உடலின் குடலை சுத்தப்படுத்தும் தன்மை இந்த வாழைப்பூக்கு உண்டு. வாழைப்பூவினை நம் சமையலில் கூட்டு செய்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்
வாழைக்காய்
வாழையின் மூலம் நமக்கு கிடைக்கும் இந்த வாழைக்காய் ஆனது நமக்கு பல ஊட்டச்சத்துகளையும் மற்றும் மருத்துவ குணங்களையும் கொண்டு உள்ளது. மேலும் இந்த வாழைக்காயில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் B6, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இதில் நிறைந்து உள்ளது. மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு போன்றவற்றை சேர்த்து சமைத்து சாப்பிடுலாம். மேலும் நம் உடலில் இதய நோய்க்கு மருந்தாக இருக்கிறது இந்த வாழைக்காய். நம் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க மிகவும் பயன்படுகிறது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வாழைக்காயினை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
மேலும் நம் உடலில் செரிமானத்திற்கும் மற்றும் இரத்த உற்பத்திக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வாழைக்காய் ஆனது நம் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இந்த வாழைக்காயை நாம் சமையலில் கூட்டாகவும் மற்றும் சிப்ஸ் செய்தும் சாப்பிடலாம்.
மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்