சிறுதானிய உணவுகள் உடல் நலத்திற்கு நிறைய நல்ல பலன்களை தருகின்றன. இந்த சிறுதானியங்களை நம் முன்னோர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முன்பே நம் உணவில் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள நிறைய ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். இந்த சிறுதானியங்களில் அதிகமாக நார்ச்சத்து, நியூட்ரியன்ட்ஸ் மற்றும் எதிர்ப்பு ஆக்சிசன்ட்கள் உள்ளன.
இந்த சிறுதானியத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த சிறுதானியகள் நவீன காலத்தில் மறக்கப்பட்டுப் போனாலும் தற்போது அதன் மகத்துவம் அறிந்து நம்முடைய அன்றாட உணவுப் பழக்கதில் இந்த நவதானிய உணவுகளை சேர்க்கிறோம். சிறுதானிய உணவுகள் என்பது தினை, கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு, குதிரைவாலி மற்றும் சாமை போன்ற வகையான தானியங்களை கொண்டு அடங்கியதாகும். இந்த சிறுதானியங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக கானலாம்.
தினை
தினை அரிசியில் மதிப்பு மிக்க அதன் ஊட்டச்சத்துகள் நம் உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு பெரிதும் உதவுகிறது.இது உடல்நலனுக்கு ஏராளமான பலன்களை நல்ல தருகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ பலன்கள் நாம் தினமும் இந்த தினை அரிசியை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் இதன் சிறப்புக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்
தினையின் பயன்கள்
தினையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை அதிகப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் தினையில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து இருதயத்தை பாதுகாக்கிறது. இந்த தினை அரிசியில் குறைவான அளவு கலோரியும், நிறைய அளவு நார்ச்சத்துக்கள் அடங்கி உள்ளன, இதனால் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக அவர்கள் உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த தினை அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. தினையில் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது நம் உடலின் இரத்த சர்க்கரையை மெதுவாக அதிகப்படுத்த பெரிதும் உதவுகிறது
கம்பு
கம்பு நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய மிகவும் பழமையான தானியங்களில் ஒன்றாக விளங்குகிறது. நவதானியங்களில் மிகவும் பரந்த அளவில் பயிரிடப்படும் ஒரே தானியம் கம்பு ஆகும். இதில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல நல்ல மருத்துவ பலன்களும் இருப்பது கம்புக்கு அதிக பெருமையை சேர்க்கிறது. மேலும் இதன் சிறப்புக்கள் மற்றும் பயன்கள் பற்றி விரிவாக காண்போம்.
மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா
கம்பின் பயன்கள்
கம்பில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, இருதய நோய்கள் நமக்கு வராமல் தடுக்க உதவுகிறது. கம்பில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து செரிமானம் நன்றாக நடக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள சத்த்துக்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க வைக்க உதவுகிறது. இழந்த உடல் சக்திகளை மீட்டு தர கம்பு பெரிதும் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய உதவுகிறது. மேலும் கம்பு பெரியர்வகள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்துக்கள் தரும் ஒரு அற்புத சிறுதானியமாகும். கம்பில் பல வகையான கம்புகள் பல நல்ல பலன்களை அனைவருக்கும் அளிக்கிறது.
சோளம்
சோளம் நம் தமிழ் நாட்டில் பரவலாக எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் ஒரு தானிய வகையாகும். சோளம் மற்ற பொருள்கள் தயாரிக்க மூல பொருளாக பயன்படுகிறது. சோளத்தில் இருந்து நமக்கு மாவு, எண்ணெய், சர்க்கரை போன்ற பல பொருட்கள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்
சோளத்தின் பயன்கள்
சோளத்தில் நார்ச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற பலவகையான சத்துக்கள் உள்ளன. சோளம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும், எலும்புகளை பலப்படுத்தவும் பெரிதளவில் பயன்படுகிறது. சோளத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. மேலும் சோளம் ஒவ்வாமையை தடுக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. சோளம் உடலை வலுப்படுத்துகிறது.குறைந்த இரத்த அழுத்தத்தை தடுக்கிறது. இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் சோளம் நம் உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்க பயன்படுகிறது. சோளம் கால்நடைகளுக்கு தீவனமாக தருவதற்கு பயன்படுகிறது.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்கள்
சோளத்தின் வகைகள்
வெள்ளை சோளம், மஞ்சள் சோளம், சிவப்பு சோளம், பழுப்பு சோளம், பொங்கல் சோளம் போன்ற பல வகையான சோள வகைகள் உள்ளன. இதில் சோளங்கள் உணவு பொருள்களுக்காக பெரிதும் பயன்படுகிறது. மேலும் இந்த சோளங்கள் கால்நடைகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் தீவனத்திற்காக பயன்படுகிறது. மேலும் தொழில்துறை செயல்பாட்டிலும் இந்த சோளங்கள் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன.
வரகு
வரகு நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. நம் கிராமப்புறங்களில் மிகவும் பொதுவாக உபயோகிக்கப்பட்ட தானியம் வரகு ஆகும். இதில் பல விதமான சத்துக்கள் நிறைந்து உள்ளதால் , இது நம் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை தருகிறது.
மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
வரகின் பயன்கள்
வரகில் இரும்பு சத்துக்கள், வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள், சுண்ணாம்பு சத்து போன்ற பல விதமான சத்துக்கள் வரகு அரிசியில் உள்ளது. சிறுநீர் பெருக்கியாக விளக்குகிறது.மேலும் இது உடல் பருமனை குறைக்கவும், நம் காலில் உள்ளச மூட்டு வலியை குணப்படுத்து தன்மை இதற்கு உண்டு. வரகில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் வரகு இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
கேழ்வரகு
கேழ்வரகு ராகி என்று அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானியங்களில் ஒன்று. பல மருத்துவக் குணங்கள் கொண்ட தானியமாகும். நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல விதமான சத்துக்கள் இதில் அதிகளவில் உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
கேழ்வரகின் பயன்கள்
கேழ்வரகில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்பு சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற அனைத்து சத்துக்கள் அடங்கி உள்ளன. கேழ்வரகு பசி உணர்வை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.இதனால் உடல் இடையை குறைப்பதற்கு உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கேழ்வரகு சிறந்த மருந்தாக பயன்படுகிறது . குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் தசை வளர்சிக்கு பெரிதளவில் உதவுகிறது. கால்சியம் சத்துக்கள் இதில் உள்ளதால் நமது பற்கள் பலப்படுத்துகிறது.
நம் உடலில் உள்ள இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை தருவதறக்கு கேழ்வரகு உதவுகிறது. இதில் உள்ள மெக்னிசியம் சத்து இதய துடிப்பை சீராக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்
கேழ்வரகின் முக்கிய வகைகள்
வெள்ளை கேழ்வரகு: இந்த கேழ்வரகுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும், இவை பலவித உணவு பொருள்களில் பெரிதும் பயன்டுகிறது.
சிவப்பு கேழ்வரகு: இந்த வகை கேழ்வரகுகள் சிவப்பு நிறத்தில் இருப்பதோடு இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது சிவப்பு கேழ்வரகுகள் கூழ் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு கேழ்வரகு: இந்த கேழ்வரகுகள் கருப்பு நிறத்தில் இருக்கும். மேலும் இதில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை பருப்பாக சாப்பிட உதவுகிறது. மேலும் இந்த கருப்பு கேழ்வரகுகளை பவுடராக செய்து பல வகையான உணவுப்பொருட்களில் கலந்து செய்வதற்கு பயன்டுகிறது.
மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா
குதிரைவாலி
குதிரைவாலி என்பது மற்ற தானியங்களை விட சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானியங்களில் ஒன்றாகும். இது பண்டைய காலங்களில் கிராமப்புற வாழ்வில் அடிக்கடி பயன்பட்ட ஒரு தானியமாக இருந்தது. இந்த குதிரைவாலி எளிதில் வளரக்கூடிய தானியமாகும். இதில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
குதிரைவாலியின் பயன்கள்
குதிரைவாலி சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இருதய அடைப்பு வராமல் தடுத்து இருதயத்தை பாதுகாக்க உதவுகிறது இது உடல் எடை இழப்பிற்க்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் தன்மைக் கொண்டது. சிறுநீர் பிரச்சனையில் இருந்து நம்மை காக்கின்றது. மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்
குதிரைவாலியின் முக்கிய வகைகள்
பசுமை குதிரைவாலி, பஞ்சு குதிரைவாலி, சாம்பல் குதிரைவாலி மற்றும் சேகரிப்புக்கேற்ப குதிரைவாலி என நான்கு வகைகளில் குதிரைவாலி உள்ளது. இதில் பசுமை குதிரைவாலி பச்சை நிறத்துடன் காணப்படுவதோடு செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. பஞ்சு குதிரைவாலி மஞ்சள் நிறத்துடனும், இதில் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நம் உடலுக்கு வளமூட்டும் தன்மை கொண்டதாக உள்ளது.
சாம்பல் குதிரைவாலி சாம்பல் நிறத்துடனும் எந்தஎந்த உணவுகளில் நீர்சத்துக்கள் குறைவாக உள்ளதோ அந்த உணவுகளில் இந்த சாம்பல் நிற குதிரைவாலி பயன்படுகிறது. அதிக உயர் விளைச்சலுக்காக சேகரிப்புக்கேற்ப குதிரைவாலிகள் பெரிதும் உதுவுகிறது.
சாமை
சாமை சிறுதானியங்களில் மிகச் சிறந்ததாகும் . இது தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். சிறிய விதைகளைக் கொண்ட சாமை, வறண்ட நிலங்களில் கூட வளரக்கூடியது. இதில் நிறைய நன்மை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்
சாமையின் பயன்கள்
சாமையில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்பு சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்து உள்ளது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் தன்மை சாமை அரிசிக்கு உள்ளது. சாமையில் சாதாரண அரிசியை விட நார்சத்துக்கள் ஏழு மடங்கு அதிகம் உள்ளது. இதன் காரணமாக சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சாமை அரிசியை சப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவை குறைக்கலாம். சாமை அரிசியில் உள்ள கால்சியம் சத்துக்கள் எழும்புகள் வழுப்பெற செய்ய காரணமாக உள்ளது. சாமை அரிசி உடலின் தசைகளை வலிமை பெற செய்கிறது. சாமை அரிசி சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி உணர்வை தூண்டாமல் தடுக்கிறது. இதனால் நம் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க சாமை அரிசி பெரிதும் உதவி புரிகிறது.
மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
சாமை அரிசியில் புரதம் 7.7 கிராம் உள்ளது. இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு உதவுகிறது. சாமை அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதில் மற்ற தானியங்களை விட இரும்பு சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
சாமையில் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. சாமையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய நன்மை தரும் கொழுப்புகள் அதிக அளவில் அடங்கி உள்ளது. மாரடைப்பு போன்ற நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து சாமை அரிசி விடுதலை தருகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா