கீரைகள் பச்சை நிறதுடன் கூடிய ஒரு தாவர வகையை சார்ந்ததாகும். இந்த கீரைகள் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளை அள்ளி தருகிறது. கீரைகள் நம்முடைய அன்றாட உணவில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த கீரைகளில் பல வகையான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துக்களை நமக்கு கொடுக்கின்றன. இந்த கீரைகளில் ஒவ்வொரு விதமான கீரையும் ஒவ்வொரு தனித்துவமான சத்துக்கள் அடங்கியுள்ளது. நாம் அன்றாட உணவில் பல்வேறு வகையான கீரைகளை சேர்ப்பதின் மூலம் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஆரோக்கியத்தை நம்மால் பெற முடியும்.
இந்த எல்லா விதமான கீரைகளும் மருத்துவ பயன்பாட்டிற்கும் உதவி செய்கிறது. கிராமங்களில் சில வகை கீரைகளை பல்வேறு விதமான செயல்களுக்கு இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த எல்லா விதமான கீரைகளை நாம் நம் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து தாராளமாக கிடைக்கும். மேலும் இந்த பதிவில் நாம் நம் வாழ்க்கையில் நம்முடைய உணவில் உபயோகப்படுத்தும் முக்கியமான கீரைகளின் வகைகளை இங்கு விரிவாக காண்போம்.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்
நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பத்து முக்கியமான கீரைகள்
- பசலைக்கீரை
- முளைக்கீரை
- அரைக்கீரை
- முருங்கைக்கீரை
- பொன்னாங்கண்ணி
- அகத்திக்கீரை
- சிறுகீரை
- புளிச்சக்கீரை
- வல்லாரைக் கீரை
- பாலக் கீரை
பசலைக்கீரை
பசலைக்கீரை ஒரு சத்தான கீரையாகும். இந்த கீரையில் பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் இந்த கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நிறைய நார்ச்சத்துக்கள் அடங்கி உள்ளது. இது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மை தரும் கீரையாக காணப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
பசலைக்கீரையின் பயன்கள்
பசலைக்கீரையில் நிறைய பயன்கள் உள்ளது. இந்த கீரை நம் உடலில் இரத்த சோகையைத் தடுப்பதற்காகவும் மற்றும் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த கீரையில் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தும் உதவும் கால்சியம் அதிகம் உள்ளது. செரிமானத்தை மேம்படுத்த இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் A நிறைந்து காணப்படுகிறது. மேலும் பசலைக் கீரையை நாம் சூப் மற்றும் கறி போன்ற அசைவ உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
முளைக்கீரை
முளைக்கீரையும் சத்தான கீரைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்த கீரையில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரிகளை கொண்டு உள்ளது. இந்த கீரையானது உலகம் மற்றும் இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தும் முக்கிய வகை கீரையாக காணப்படுகிறது.
மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா
முளைக்கீரையின் பயன்கள்
முளைக்கீரையில் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன. மேலும் இந்த கீரை நம் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை சரிசெய்து இருதய செயல்பாட்டிற்கு பெரும் உதவி புரிகிறது. முளைக்கீரை நம் உடலில் செரிமானத்தை அதிகப்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை தடுக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய காரணியாக உள்ளது. கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் இதில் நிறைய உள்ளது.
அரைக்கீரை
அரைக்கீரை என்பது ஒரு சத்தான பொக்கிஷமான கீரை வகையாகும். இதில் பல மருத்துவ குணங்ககள் நிறைய உள்ளன. மேலும் இந்த கீரையில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் காணப்படுகிறது.
மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்
அரைக்கீரையின் பயன்கள்
அரைக்கீரை இரத்தத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. மேலும் நம் உடலில் உள்ள இரும்பு பற்றாக்குறையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. இந்த கீரையானது செரிமானத்தை சரிசெய்து மலச்சிக்கல் மற்றும் குடல் ஆரோக்கியம் போன்றவற்றிக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் அரைக்கீரை நம் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த அரைக்கீரையில் நம் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் எலும்பு வலிமைக்கும் பெரிய அளவில் உதவி செய்கிறது.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரைக்கு மருந்து கீரை என்ற ஒரு பெயர் உள்ளது. இந்த கீரை ஊர்களில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. மேலும் இந்த கீரையில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கி உள்ளது. இந்த கீரையானது பல மருத்துவ குணங்களைக் கொண்ட கீரையாக போற்றப்படுகிறது. இது நம் உடலில் உள்ள பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்து நம்மை காக்கிறது. இது நம் உடலுக்கு தேவையான பலவிதமான நன்மைகளை நமக்கு தருகிறது.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்
முருங்கைக்கீரையின் பயன்கள்
முருங்கைக்கீரையில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளது. இது நம் உடலின் தோல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. மேலும் இந்த கீரை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் இரத்த சோகையைத் தடுக்கவும் பெரிய அளவில் உதவி புரிகிறது. மேலும் இந்த கீரையில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிக்கப்படுத்த காரணமாக உள்ளது. மேலும் இந்த கீரையில் நம் உடலில் உள்ள முடி வளர்ச்சிக்கும் பெரிய பங்கு அளிக்கிறது.
பொன்னாங்கண்ணி
பொன்னாங்கண்ணி கீரை ஒரு சத்தான மற்றும் பலவித மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு கீரை வகையாகும். இந்த கீரையானது தண்ணீர் மற்றும் ஈரமான பகுதிகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மேலும் இந்த கீரையை மஞ்சள் பத்தி கீரை எனவும் பலரும் அழைப்பார்கள். இந்த பொன்னாங்கண்ணி கீரையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளது.
மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்
பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையானது நம் உடலில் உள்ள பசை மற்றும் கொழுப்பு குறைப்பு பயன்களை உருவாக்க காரணமாக காணப்படுகிறது. மேலும் இந்த கீரையில் உள்ள பொட்டாசியம் இருதய ஆரோக்கியத்துக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் பெருமளவில் பயன்படுகிறது. இந்த கீரை தசைகளின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவி புரிகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலின் செரிமான பிரச்சனையை சரிசெய்து மலச்சிக்களுக்கு தீர்வாக அமைகிறது. மேலும் பொன்னாங்கண்ணி கீரை நம் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி இரும்பு பற்றாக்குறையை பிரச்சனையை தீர்த்து வைக்கிறது.
அகத்திக்கீரை
அகத்திக்கீரையும் நிறைய மருத்துவப் பயன்கள் மற்றும் சத்தான ஒரு கீரை வகையாகும். அகத்திக் கீரையானது இந்தியா முழுவதும் பரவலாக மிகவும் பிரபலமான கீரை ஆகும். இதன் அதன் இலைகளில் பல்வேறு விதமான சத்துக்களை கொண்டு உள்ளது. இது மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.
மேலும் படிக்க: ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா
அகத்திக்கீரையின் பயன்கள்
அகத்திக்கீரையில் நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி உள்ள காரணத்தினால் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் K ஆனது எலும்புகளின் வலிமைக்கு பெரிதும் பயன்படுகிறது. இந்த கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நம் உடலை கொடிய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கீரையில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலில் சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.
சிறுகீரை
சிறுகீரை ஆனது ஒரு கொடி வகையான கீரையாகும். இந்த கீரையானது தமிழில் சதிவா என்று கூறப்படுகிறது. இந்த கீரை வகைகள் நம் அன்றாட சமையலில் சிறந்த உணவுப் பொருளாக விளங்குகிறது. மேலும் பல மருத்துவ குணங்களுக்காகவும் பெருமளவில் உதவுகிறது.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்
சிறுகீரையின் பயன்கள்
சிறுகீரை நம் உடலில் நிறைய விரைவான நீர்ப் போக்கை உதவுகிறது. இந்த கீரையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் எலும்புகளின் வலிமைக்கு வழிவகுக்குகிறது. மேலும் கண்களின் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் போன்றவைகளுக்கு காரணமாக உள்ளது.
புளிச்சக்கீரை
புளிச்சக்கீரை என்பது ஒரு சத்தான மற்றும் பசுமையான கொடி வகை கீரையாகும். இந்த கீரை புளி மரத்தின் இலைகளாக உள்ளது. இந்த கீரை மிகவும் சுவையானது மற்றும் நமக்கு பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டு உள்ளது. புளிச்சக்கீரையின் இலைகளை நாம் நம் அன்றாட சமையலில் பருப்பு , சூப் மற்றும் பல குழம்புகளில் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா
புளிச்சக்கீரையின் பயன்கள்
புளிச்சக்கீரை ஆனது உடல் செல் வளர்ச்சிக்கும் மற்றும் சீரான உடல் இயக்கத்திற்கு பெருமளவில் பயன்படுகிறது. இந்த கீரை நம் உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் மற்றும் அழற்சிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இந்த கீரையானது நம் உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக்கப்படுத்தி நம்மை காக்கிறது.
வல்லாரைக் கீரை
எளிதில் கிடைக்கும் கீரை வகைகளில் வல்லாரைக் கீரை ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கீரையானது நம் தமிழகத்தில் பாரம்பரிய மூலிகைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இந்த கீரை சிறப்பான மருத்துவ குணத்தால் பெரிய அளவில் பெயர் பெற்றது. மேலும் சுவையான உணவுகளுக்கும் இந்த கீரை காரணமாக அமைகிறது. மேலும் பல்வேறு விதமான ஆரோக்கிய பயன்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது.
மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
வல்லாரைக் கீரையின் பயன்கள்
வல்லாரைக் கீரையை உண்பதன் மூலம் நம் மூளைக்கு சக்தி கொடுத்து நமக்கு நினைவாற்றலை அதிகபடுத்த இந்த கீரை உதவுகிறது. மேலும் இந்த கீரையானது நமக்கு தூக்கமின்மையை நீக்கி நல்ல தூக்கத்தினை அளிக்கிறது. நம்முடைய உடலில் செரிமான மண்டலத்தை சரிசெய்து செரிமானத்தை எளிதாக்க வழிச் செய்கிறது. இதில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளதால் இரத்த சோகையை தடுப்பதற்கு பெரிய அளவில் உதவுகிறது.
பாலக் கீரை
நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரைகளில் பாலக் கீரையும் ஒன்றாகும். இந்த பாலக் கீரை உலகளவில் மிகவும் பிரபலமான கீரையாக உள்ளது. மேலும் இதில் உள்ள மென்மையான இலைகள் மற்றும் பல்துறை உபயோகத்திற்காக பெருமளவில் அறியப்படுகிறது. இந்த பாலக் கீரையில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இந்த கீரை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா
பாலக் கீரையின் பயன்கள்
பாலக் கீரையானது ஃபோலேட் ஆனது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் முக்கியமான கீரையாக உள்ளது. மேலும் இதில் உள்ள ஆக்ஸலிக் அமிலம் நம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை தடுப்பதற்கு பெரிய அளவில் உதவி புரிகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ ஆனது கண் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளதால் செரிமானத்தை அதிகபடுத்த உதவி புரிகிறது. இந்த கலோரிகள் குறைந்த அளவில் உள்ள காரணத்தால் நம்முடைய உடல் எடை குறைப்பிற்கு பெருமளவில் உதவி செய்கிறது.
மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்