உலகில் ஏராளமான வகையான பூக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு தனிச்சிறப்பை கொண்டு உள்ளது. பூக்களில் பலவிதமான வாசனை மிக்க பூக்கள் காணப்படுகிறது. மேலும் இங்கு பலவித பூக்களைப் பற்றியும் மற்றும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பூக்களின் வகைகள்
- ரோஜா
- மல்லிகைப்பூ
- செம்பருத்தி
- முருங்கய்ப்பூ
- நித்திய கல்யாணி பூ
- வேம்பு பூ
- மாதுளம் பூ
ரோஜா
ரோஜா அழகுக்கு மட்டுமல்லாமல் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது ரோஜாவின் பயன்கள் ரோஜா இதழ்களை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் சீதபேதி குணமாகும் ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை கொதிக்க வைத்து அதில் பாதியை எடுத்து சர்க்கரையை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
ரோஜா இதழ்களை இரண்டு கைப்பிடி எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் காலை மாலை இருவேளை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வர பித்தம் மயக்கம் வாந்தி நெஞ்செரிச்சல் குணமாகும் ரோஜா தைலம் காது வலி, காது குத்தல், காது புண், காதில் ரோகம் போன்றவற்றை குணமாக்கும் ரோஜா பூ. கஷாயத்துடன் காட்டு சீரகத்தை சேர்த்து அரைத்து ஒரு துணியில் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷம் மற்றும் தும்மல் போன்றவை குணமாகும்.
ரோஜா பூவை காயவைத்து அதனை நன்றாக பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர முகப்பொலிவு கூடும். அல்சர் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும். ரோஜா பூவை பொடி செய்து அதனுடன் அரிசி மாவு மட்டும் பன்னீர் கலந்து வாரம் இரண்டு முறை முகத்தில் பூசி வர முகம் பிரகாசமாகும் குல்கந்தை சாப்பிட்டால் இரத்தம் சுத்தம் அடைந்து சருமம் பளபளப்பாகும். ரோஜா சர்ப்பத்தை அருந்தினால் மலச்சிக்கல் குணமாகும்.
மேலும் படிக்க: நன்மைகளை அள்ளித் தரும் நவதானியங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க
மல்லிகைப்பூ
மல்லிகைப்பூ வாசனைக்கு மட்டுமல்லாமல் மல்லிகையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது மல்லிகை பயன்கள் ஒரு கைப்பிடி மல்லிகை எடுத்து அதனை பாதியாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்பும் குணமாக உதவுகிறது. சிறுநீரகப் பிரச்சனை உஷ்ணத்தை போக்கும் சிறுநீர் பாதையில் உள்ள எரிச்சலை தடுக்கிறது. அஜீரண கோளாறு மலச்சிக்கல் குடல் ஆரோக்கியத்திற்கு இந்த கொதிக்க வைத்த தண்ணீரை காலை மாலை இருவேளையும் குடித்து வர பிரச்சனை சரியாகிவிடும். குடற்புண் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை தீரும். கண் பார்வை கூர்மையாவதுடன் கண்ணீர் ஏற்படக்கூடிய சதை வளர்ச்சி குணம் ஆகும்.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்
இந்த தண்ணீர் ஒரு கிருமி நாசினியாக விளங்க கூடியது ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைக்கும் இந்த தண்ணீர் தலைக்கு தேய்த்து குளித்து வர கூந்தல் நல்ல மனம் ஆகும் நல்ல கண்டிஷனராக உதவுகிறது. மேலும் கூந்தலுக்கு ஈரத்தன்மை அளிக்கிறது. பால்வினை நோய்களுக்கு மல்லிகை மொட்டு உதவுகிறது. மளிகை மட்டுமே அரைத்து காயம் புண் மற்றும் வீக்கங்கள் உள்ள இடத்தில் பூசினால் உடனே குணமாகும் தாய்மார்கள் மார்பில் கட்டி உள்ள பாலினி சரிசெய்ய மல்லிகை பூ அரைத்து மார்பகத்தில் பத்து போல் போட்டு வர தாய்ப்பால் சுரப்பது குறைவாகி விடும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மாளிகை பூக்களை ஒன்று அல்லது இரண்டு உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மல்லிகைப் பூவில் இருந்து பெறப்படும் எண்ணெய் உடல் வலிக்கு மற்றும் உடல் குளிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் உடல் சூடு உள்ள பெண்கள் மல்லிகைப்பூவை தலையில் சூடிக் கொள்ள அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரலாம். செம்பருத்தி பூ மட்டும் இல்லாமல் மற்ற அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டது.
மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்
செம்பருத்தி
செம்பருத்தி பூ மட்டும் இல்லாமல் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டது. செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பேன் மற்றும் பொடுகு நீங்கும். செம்பருத்தி பூவின் சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து வானொலியில் இட்டு காய்ச்சி வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் வைத்து தொடர்ந்து தடவி வர தலைமுடி கருமையாக அடர்த்தியாக வளரும். தினமும் காலையில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீங்க பெற்று இரத்தம் சுத்தமாகி உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.
மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
செம்பருத்தி பொடியுடன் மருதம் பட்டை தூளை கலந்து காலை மற்றும் மாலை சாப்பிட இரும்பு சத்து அதிகரிக்கும் ரத்த சோகை குறைய தொடங்கும் செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும் அந்த பூவை வேக வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி குடிப்பதால் மாதவிடாய் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். செம்பருத்திப் பூக்களை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தடவி வர கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து செம்பருத்தி பூவினை மென்று சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும். செம்பருத்திப்பூ கஷாயம் சிறுநீர் பெருக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.
மேலும் உடலில் உள்ள நஞ்சுக்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது சரும பளபளவிற்கு உதவுகிறது இரண்டு அல்லது மூன்று செம்பருத்தி பூவை எடுத்து அதனை கொதிக்க வைத்து தீயாக அருந்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இந்த டீயை தொடர்ந்து அருந்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும் சரும பொலிவு ஏற்படும்.
மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்
முருங்கைப்பூ
முருங்கை மரத்தில் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் உடையது சில முருங்கை பூக்களை அலட்சியமாக எண்ணுகிறார்கள். ஆனால் அதில் நிறைய மருத்துவ பயன்கள் உள்ளது. முருங்கை பூவை சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறைவாகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும். அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் குழந்தைகளுக்கு இந்த பூவினை சமைத்து தர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மேலும் கண் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும் முருங்கைப் பூவினை காய வைத்து பொடி செய்து அதனை தேனில் கலந்து சாப்பிட்டு வர கண் பார்வை திறன் அதிகரிக்கும். இந்த முருங்கை பூ எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவாகும். இந்த பூவில் கஷாயம் செய்து குடித்து வந்தால் பித்தம் மற்றும் நரம்பு தளர்ச்சி நீங்கும். முருங்கைப்பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாக காய்ச்சி தினமும் இருவேளை அருந்தி வர கண் பார்வை அதிகரிக்கும்.
மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்
நித்திய கல்யாணி பூ
நித்திய கல்யாணி இந்த பூவினை சுடுகாட்டு பூ என்று அழைப்பார்கள் நித்யா என்றால் தினமும் கல்யாணி என்றால் மங்களம் எந்த பொருள் நித்திய கல்யாணி இலையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து புற்று நோய்க்கு மருந்தாக விளங்குகிறது. இந்த பூவை மை போல் அரைத்து ஆறாத புண்ணில் தடவி வர மிக விரைவில் ஆறிவிடும். காலையில் கொதிக்கும் தண்ணீரில் மூன்று அல்லது நான்கு பூக்களை போட்டு அந்த நீரை குடித்து வந்தால் உடலின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். உடலில் உள்ள அசுத்தம் மற்றும் புழுக்களை மலத்துடன் நீக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. பரம்பரை பரம்பரையாக வரும் நோய்களை தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. இந்த பூக்களை தேநீர் போல் தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாடாகும்.
மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்
உடல் எடையை குறைப்பதற்கு இந்த தேநீர் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைப்பதற்கும் உதவுகிறது. இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் நுரையீரலில் உள்ள கழிவினை வெளியேற்றம் செய்து நுரையீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். மேலும் சுவாச பிரச்சினையில் இருந்து விடுபடலாம். இந்த தேநீரை தொடர்ந்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். பக்கவாதம் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.
ஞாபகத்திறன் அதிகரிக்க குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த தேநீரை கொடுக்கலாம். மேலும் சரும சுருக்கம், முடி உதிர்வதையும் இளமை தோற்றத்திற்கு உதவுகிறது. இந்த தேநீரை பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் அதிக உதிரப்போக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நித்திய கல்யாணி மற்றும் வேப்பிலை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் தோல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்
வேம்பு பூ
வேப்பம்பூ கசப்பு தன்மை கொண்ட இந்த பூவினை மருத்துவ பலன்கள் அதிகமாக உள்ளது இது வயிற்றில் மற்றும் மலக்குடலில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கும் வேப்பம்பூவை அரைத்து தேனில் கலந்து வாரம் இருமுறை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பெரியவர்கள் மாதம் ஒரு முறை வயிறு சுத்தம் செய்வதற்கு வேப்பம்பூ பொடியை மோரில் கலந்து குடிக்கலாம். சரும வியாதிக்கு உள் மருந்தாக பயன்படுத்தலாம். கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கும். உணவில் வேப்பம்பூ சேர்த்துக் கொள்வதால் இரத்த அழுத்தம் நீரழிவு பிரச்சினைகள் கட்டுக்குள் வைக்க உதவும். சரும அரிப்பு மற்றும் கை கால்கள் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. வேப்பம் பூவின் நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி மற்றும் காது வலி நீங்கும்.
வேப்பம் பூவை வெயிலில் காயவைத்து பருப்பு பொடிவுடன் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வர வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வேப்பம்பூ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. வேப்பம்பூ பொடியை தண்ணீரில் கலந்து அதை தலை முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் பேன் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்பம் பூ கொடி மற்றும் மஞ்சள் தூள் கலந்து அதை சருமத்தில் பூசி வர தேமல் மறையும்.
மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
மாதுளம் பூ
மாதுளம் பூ இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. மாதுளம் பூவே நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் பெறும். மாதுளம் பூவை கஷாயம் வைத்து காலை மற்றும் மாலையில் குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்திற்கு மாதுளை பூவின் பொடியை சுடு தண்ணீரில் கலந்து கொடுத்து வர குணமாகும். பித்த கோளாறு உள்ளவர்கள் மாதுளம்பூவை எடுத்து ஒன்று இரண்டாக தட்டி போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து ஒரு ஒரு டீஸ்பூன் அளவு காலையில் மட்டும் 20 நாள் சாப்பிட்டால் பித்த கோளாறு சரியாகும். மாதுளம் பூ இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்