கோயம்புத்தூரில் நாம் நிறைய இடங்களுக்கு போனாலும், நம் மனதிற்கு மன நிம்மதியை தருவது இந்த கோவில்கள் ஆகும். மேலும் நாம் கோவையில் அவசியம் சென்று பார்க்க வேண்டிய கோவில்களை இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்வோம்.
கோவையில் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்
- ஈச்சனாரி விநாயகர் கோயில்
- முந்தி விநாயகர் கோவில்
- மருதமலை
- பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
ஈச்சனாரி விநாயகர் கோயில்
கோயிலின் சிறப்புகள்
கோவை மாவட்டத்தில் ஈச்சனாரி என்ற ஊரின் அடையாளத்தைக் கொண்ட மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். சுமார் 500 வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஒரு விநாயகர் சிலையை வைக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் இருக்கும் மிகவும் திறமை வாய்ந்த சிற்பிகளின் மூலம் ஒரு விநாயகர் சிலையை செதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் அந்த சிற்பிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்து சுமார் ஆறு அடிக்கு ஒரு விநாயகர் சிலையை செதுக்கி கொடுத்தனர்.
அந்த சிலை மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு மாட்டு வண்டி மூலமாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி கொண்டு வரும் வழியில் மாட்டு வண்டியில் அச்சு முறிந்து வண்டி நகர முடியாமல் ஒரு இடத்தில் நின்று விட்டது. வண்டியை நகர்த்த முடியாத காரணத்தால் விநாயகரை வேறொரு மாட்டு வண்டிக்கு மாற்றி கொண்டு செல்ல யோசனை செய்தார்கள். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் வண்டியில் இருக்கும் விநாயகர் சிலையை நகர்த்த கூட முடியவில்லை. ஆனால் எப்படியாவது இந்த விநாயகர் சிலையை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பலமுறை முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் விநாயகரை நகர்த்தவே முடியவில்லை. ஒருநாள் விநாயகர் காஞ்சி சங்கராச்சாரியார் கனவில் நான் எங்கு செல்லவும் விரும்பவில்லை. அதனால் எனக்கு ஒரு கோவில் இங்கேயே கட்ட வேண்டும் என விநாயகர் கூறி இருந்தார். அதனால் வேறு வழி இல்லாமல் விநாயகருக்கு அங்கேயே கோயில் கட்ட ஆரம்பித்தார்கள். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக கோவிலை கட்டினார்கள். மேலும் கட்டி முடித்ததும் கும்பாபிஷேகம் நடத்தி விநாயகரை வழிபட்டு இருக்கிறார்கள். ஆகையால் இப்படி உருவானது தான் இந்த ஈச்சனாரி விநாயகர் கோவில் ஆகும். அதனால் தான் இந்த கோவில் இவ்வளவு சிறப்பு மிக்கதாக உள்ளது.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்
முந்தி விநாயகர் கோவில்
கோயிலின் சிறப்புகள்
கோயம்புத்தூர் புலியகுளத்தில் அமைந்து உள்ளது தான் இந்த முந்தி விநாயகர் கோவில் ஆகும். இந்த கோவில் உள்ள விநாயகர் ஆனது ஒரே கல்லில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகருக்கு தும்பிக்கை ஆனது வலம் சுழிந்து காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கும் இந்த விநாயகர் வலது முன் கரத்தில் தந்தமும் வலது பின் கரத்தில் அங்குசமும் இடது முன் கரத்தில் பலாப்பழமும் இடது பின் கரத்தில் பாச கயிறும் தாங்கி காட்சி தருகிறார்.
மேலும் தும்பிக்கையில் லட்சுமியின் அம்சமான அமிர்தக் கலசத்தை வைத்து இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் இந்த முந்தி விநாயகர் தன்னுடைய வயிற்றில் வாசுகி பாம்பை கட்டி இருக்கிறார். இதனால் நாக தோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வணங்கினால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி விலகி ஓடும். இந்த விநாயகரின் வலது பகுதி ஆண்களை போலவும் இடது பகுதியில் பெண்களின் வடிவிலும் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விநாயகர் அரச மரத்தடியின் கிழக்கு நோக்கி இங்கு அருள் பாலிப்பதால் இவரது இடது திருவடியில் பத்ம சக்கரம் இருப்பதால் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குகிறார் இந்த முந்தி விநாயகர் ஆவார். இந்த முந்தி விநாயகரின் சிற்பம் ஆனது 21 சிற்பிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஆண்டுகள் உழைப்பின் பலனாக இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலையானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை செய்வதற்கு கல்லானது பல இடங்களிலும் தேடி அலைந்து முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற இடத்தில் இந்த சிலை செய்வதற்கு கல் தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் அங்கேயே வைத்து இந்த சிலையானது செய்யப்பட்டு புலியகுளம் கொண்டு வரப்பட்டது. இந்த பிரம்மாண்ட முந்தி விநாயகர் சிலை ஆனது சுமார் 19 அடி பத்து அங்குலம் உயரமும் மற்றும் 11 அடி பத்து அங்குலம் அகலம் கொண்டது. மேலும் இந்த விநாயகர் சிலை ஆனது 190 டன் எடை கொண்டு உள்ளது. இந்த விநாயகரை அதன் மூலஸ்தானத்தில் வைப்பதற்கு எந்த ஒரு இயந்திரத்தையும் பயன்படுத்தாமல் மனிதர்களைக் கொண்டே அதன் மூல ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்
மருதமலை
கோயிலின் சிறப்புகள்
மருதமலை கோயிலுக்கு நிறைய சிறப்புகள் இருக்கிறது முருகப் பெருமானுக்கு நிறைய கோவில்கள் இருந்தாலும் மூலவர் முருகனை சுயம்பு மூர்த்தியாக கொண்ட ஒரே இடம் இந்த மருதமலை ஆகும். மேலும் மருதமலை ஒரு சோமஸ்கந்த தலமும் ஆகும். அதாவது சிவ பெருமான் மற்றும் பார்வதிக்கும் நடுவில் இருக்கும் வடிவத்தை சோமஸ்கந்தம் மூர்த்தம் என்று சொல்வார்கள்.
இந்த வடிவம் இயற்கையாக அமைந்த இடம் இந்த மருதமலை ஆகும். அதாவது மருதமலைக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி சிவன் வடிவம் ஆகவும், அங்கு இருக்கும் நீலிமலை பார்வதியின் வடிவம் ஆகவும் நடுவில் இருக்கும் மருதமலை முருகன் வடிவமாகவும் காணப்படுவதால் இந்த இயற்கை இறை வடிவத்தை சோமஸ்கந்தம் மூர்த்தம் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. இது மருதமலைக்கு உண்டான தனிச்சிறப்பாகும்.
மேலும் இந்த மருதமலை ஆனது முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாகும். இது இந்த கோவில் ஆனது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கடல் மடத்திலிருந்து சுமார் 741 மீட்டர் வீரத்தில் அமைந்து இருக்கிறது. இந்த மருதமலை கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட ஒரு பழமையான கோவில் ஆகும். இந்த கோவில் தெற்கு மூலையில் பாம்பாட்டி சித்தர் கோவில் உள்ளது. இவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த 18 பழம்பெரும் சித்தர்களில் ஒருவர் ஆவார்.
இவர் இங்கு சில காலம் தங்கி இருந்து தியானம் செய்தார். அதன் நினைவாக இங்கு இவருக்கு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. மலைப்பகுதி மற்றும் படிப்புகள் வழியாக செல்லும் வழி. மலைப் பகுதியில் கோவில் சார்பாக மணி பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் மலை பாதையில் செல்ல அனுமதி உண்டு. இந்த மருமலை ஆனது கோவை மாவட்டம் காந்திபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. கோவையில் உள்ள முக்கியமான திருத்தலங்களில் இந்த மருதமலை கோவிலுக்கு முக்கிய பங்கு உண்டு.
மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
கோயிலின் சிறப்புகள்
மிகவும் பழமையான கோவிலில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முதன்மையானது. இந்த கோவில் கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ளது. தேவலோகத்தில் பசுவாக விளங்க கூடியது காமதேனு. இந்த காமதேனுவிற்கு பிரம்மனை போல் தானும் படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த காமதேனும் தவம் செய்ய பூலோகம் வந்து தேர்வு செய்த இடம் பட்டீஸ்வரம் என்ற ஊர். சிவபெருமானிடம் இந்த காமதேனும் தன் பாலினால் சிவனுக்கு அபிஷேகம் செய்து தினம் தோறும் மனதில் நினைத்து தனக்கும் அந்த சக்தி வேண்டும் என்று வேண்டி கொண்டது. இந்த காமதேனுக்கு ஒரு கன்று குட்டி உள்ளது. அந்த கன்று குட்டிக்கு பட்டி என்று பெயர். அதற்கு நந்தினி என்ற ஒரு கன்றுக்குட்டியும் உள்ளது.
அந்த காமதேனும் ஒரு நாள் சிவபெருமானை பூஜை செய்து கொண்டிருக்கும் போது இந்த கன்று குட்டி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த கால் சிவபெருமானின் மேல் பட்டதும் இதனை பார்த்து காமதேனும் கதறி அழுக ஆரம்பித்தது. சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டது. கண்ணீருக்கு இறங்கி வந்து சிவபெருமான் காட்சி காட்சி கொடுத்தார். சிவபெருமானிடம் காமதேனு என்னை மன்னித்து விடுங்கள் என் பிள்ளை செய்த தவறுக்கு என்றது. காமதேனு நீ வருந்தாதே என்றார். சிவபெருமான் உனக்கு அது குழந்தை என்றால் எனக்கும் அது குழந்தைதான் அது தீண்டும்போது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது என்றார் சிவபெருமான்.
காமதேனுவை பார்த்து கேட்ட வரத்தை நான் உனக்கு திருக்கருகாவூரில் தருகிறேன். உன் குழந்தையின் கால் தடம் மேல் பதித்ததால் இது பட்டீஸ்வரம் என்று இந்த ஊர் விளங்கட்டும் மற்றும் காமதேனுபுறம் என்ற பெயரும் இந்த ஊருக்கு நிலைக்கட்டும் என்றார். காமதேனு அதன் குழந்தையான பட்டியை அழைத்துக் கொண்டு திருக்கருகாவூர் பயணித்தது. அந்த தழும்பு இன்னும் அந்த சிவபெருமான் மேல் உள்ளது. அம்பாளுக்கு பச்சை நாயகி என்ற பெயரும் உண்டு. இந்த கோவில் உள்ள நடராஜர் சிலை தனி சிறப்பு வாய்ந்தது. எல்லா இடத்திலும் நடராஜர் ஆடுகின்ற கோலத்தில் தான் பார்க்க முடியும். ஆனால் இங்கு மட்டும் தான் ஆடி முடித்த கோலத்தில் காண முடியும்.
மேலும் இந்த கோவில் ஐந்து அதிசயங்கள் உள்ளன. இங்குள்ள பனை மரத்திற்கு வயது எவ்வளவு என்பதை கண்டறிய முடியவில்லை. இரவாமலே இருப்பதால் இதை இரவா பனை என்பார்கள். பிறவா புளி என்பது புளியங்கொட்டை பொதுவாக ஒரு இடத்தில் போட்டால் முளைக்க கூடியதாகும். ஆனால் எங்களுக்கு புளியங்கொட்டை மீண்டும் எனக்கு பிறவி வேண்டாம் என்று வரம் வாங்கியுள்ளது. அதனால் எங்கு போட்டாலும் இங்குள்ள புளியங்கொட்டை மீண்டும் முளைக்காது. இந்த பட்டீஸ்வரரை சரணடைந்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்பதை உணர்த்துவதற்கு தான் இரவாபனை பிறவா புளி விளக்கமாகும்.
இந்த பட்டீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு ஆன்மா இறந்ததாலும் அதனுடைய வலது காது மேல் நோக்கி வண்ணமாக தான் வைத்திருப்பார்கள். எதனால் என்றால் அந்த ஆத்மாவின் வலது காதில் சிவபெருமான் பஞ்சாக்ஷரத்தை ஓதி அவர்களுக்கு முத்தி அளிக்கக்கூடிய முத்தி தலமாகவும் விளங்குகிறது. இந்த பட்டீஸ்வரன் காமதேனு வந்து வாழ்ந்ததால் இங்கு சாணம் புழுக்காது. புழுவே வராது என்பது கண்டறியப்பட்ட உண்மை. ஒரு உடல் இறந்தால் நமக்கு மிச்சமாவது சாம்பலும் எழும்பும் தான் இந்த எலும்பை நாம் நொய்யல் ஆற்றில் போட்டால் சிறிது காலத்தில் அது கல்லாக மாறிவிடும் என்பது உண்மை. ஒரு மனிதன் பிறவி என்பது முழுமையாக முடிந்து பிறவா நிலையை தந்து விளங்குகிறவர் தான் இந்த சிவபெருமான் ஆவார். மேலும் கோவையில் நாம் அவசியம் போக வேண்டிய கோவில்களில் இந்த கோவில் மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.
மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்