ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்

ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்

மாதுளை என்ற பழம் இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் ஆகும். நம்முடைய பழமையான பாரம்பரிய உணவு பழங்களில் முக்கியமாக இந்த மாதுளை பழம் திகழ்கிறது. மேலும் இதில் அதிக அளவு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. இந்த மாதுளை பழம் பண்டைய காலத்தில் இருந்தே பல்வேறு விதமான நன்மைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த அற்புத மாதுளை பழமானது நம் உடலுக்கு தேவையான பலவித அனைத்து நன்மைகளை அள்ளித் தருகிறது. மாதுளை பழம் தாள்பழம் என்றும் இயற்கையின் ரத்தினம் என்றும் பலவித பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மாதுளை பழத்தின் பல்வேறு விதமான பலன்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

மேலும் படிக்க: ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா

ஆன்டிஆக்ஸிடன்ட் பலன்கள்

மாதுளை பழத்தில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்ற காரணத்தால் நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய இலவச ரேடிக்கல்களை எதிர்த்து போராடி நம்மை பெரிதும் பாதுகாக்கின்றன. மேலும் இந்த மாதுளை பழமானது நம் உடலில் உள்ள செல் பாதிப்பினை தடுத்து வயதான தோற்றம் சீக்கிரம் வராமல் இருக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

மாதுளை நம் உடலில் உள்ள செல்களின் இன்சுலினை நன்றாக பயன்படுத்தி, மேலும் மாதுளை பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நிதானமாக செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. இதனால் சர்க்கரையின் அளவினை அதிகம் ஆகாமல் தடுக்க பெரிதும் இந்த மாதுளை பழம் நமக்கு உதவுகிறது.

மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

செரிமான ஆரோக்கியத்திற்கு ஊக்குவிக்கிறது

மாதுளை நம் உடலின் உள் புறத்தை நன்றாக பாதுகாத்து குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்க உதவுகிறது. மேலும் இந்த பழம் குடலில் நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சியை அதிகப்படுத்தி செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. இதனால் நம் உடலில் உள்ள மலச்சிக்கலைத் தடுப்பதற்கு பெரிதும் இந்த மாதுளை பழமானது உதவுகிறது.

இரத்த சோகையை தடுக்கிறது

மாதுளை பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால் நம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் நம் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுவதை எளிதாக மாற்றுகிறது. இவை இரத்த சோகையைத் தடுக்கும் முக்கிய காரணியாகவும் விளங்குகிறது.

மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா

சரும ஆரோக்கியம்

மாதுளை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதால் இவை சருமத்திற்கு நல்ல இளமையான தோற்றத்தை அளிக்கிறது. மேலும் இந்த மாதுளை பழமானது சருமத்தை மென்மையாகவும் மற்றும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது.

மாதுளை பழத்தினால் நம் பற்களின் நலம்

மாதுளை பழம் நமக்கு பல்வேறு விதான பகுதிகளுக்கு நன்மையை அள்ளித் தருகிறது, அதோடு அல்லாமல் நம் வாயில் உள்ள பற்களுக்கும் பலன்களை தருகிறது. இந்த மாதுளை பழத்தின் சாறு ஆனது நம் வாயில் உள்ள வாய் நாற்றத்தை நீக்கி நம் வாயினை நன்றாக சுத்தம் செய்யும் தன்மை இதற்கு அதிகம் உண்டு.

மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா

புற்றுநோய் வராமல் தடுக்கும் மாதுளை

மாதுளை பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை நன்றாக குறைத்து, நம் செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. இது புற்றுநோய் செல்கள் தோன்றுவதையும், மற்றும் அது வளர்வதையும் தடுக்கும் பங்கை அளிக்கிறது. மேலும் இந்த மாதுளை பழத்தின் சாறுகள் நம் செல்களை பாதுகாக்கும் தன்மை கொண்டதால் நம் உடலில் புற்றுநோய் வராமல் உதுவுகிறது.

மாதுளையின் ஞாபகசக்தி திறன்

மாதுளை பழத்தில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஒரு வகையான ஆன்டிஆக்ஸிடன்ட் மூளை செயல்பாட்டை நன்றாக அதிகப்படுத்துகிறது. மாதுளையில் எல்லாகிக் அமிலமானது எளிதான தாகங்களை நன்றாக குறைத்து, வயதானவர்களுக்கு வரும் மார்க்கின் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் ஃலவனோயிட்ஸ் ஆனது ஞாபகசக்தி மற்றும் படிப்புத் திறன் குறையும் போது அதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்

மாதுளையின் மூட்டு ஆரோக்கியம்

மாதுளை பழத்தில் உள்ள அதீத நன்மைகளுக்கு காரணம் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள், இவை நம் உடலில் உள்ள மூட்டுவலி மற்றும் கீல்வாதம் போன்ற மூட்டு வீக்க நோய்களில் இருந்து பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மாதுளையின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறிது நல்ல பலன்களை அளிக்கிறது. மேலும் மாதுளை பழம் ஆனது நம்முடைய உடலின் மூட்டு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதில் பெரும் பங்கை வகிக்கின்றது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

நம் தலையில் உள்ள மூளையானது அழற்சி நோய்கள் உண்டாக முக்கிய காரணியாக அமைந்து உள்ளது. இந்த மாதுளை பழத்தில் உள்ள சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளை அழற்சியைக் குறைத்து மூளை ஆரோக்கியத்தை அதிகப்படுத்த பெரிதளவில் பயன்படுகிறது.

மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

முடி வளர்ச்சிக்கு மாதுளையின் பங்கு

மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வேர்களுக்கிடையே இரத்த ஓட்டத்தினை நன்றாக அதிகப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் இரத்த ஓட்டம் நேரத்தில் முடி வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை திறம்பட அளிக்கிறது. மேலும் இந்த மாதுளை பழத்தில் உள்ள ஒரு ஆலிகிக் அமிலம் ஆனது முடி பாதிக்கப்பட்ட இடத்தினை சரிசெய்து அதனை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இவை முடி உதிர்வு மற்றும் முடி உடைப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

கொழுப்பை குறைக்கும் மாதுளை

மாதுளை பழத்தில் உள்ள விதைகளில் குறைந்த அளவிலான கலோரிகள் நிறைய உள்ளன. மேலும் இவற்றில் நிறைய நார்ச்சத்துக்கள் அடங்கி உள்ளது. இதனால் இந்த மாதுளை பழம் ஆனது நம் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.

மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்

நீரழிவு குறைப்பில் மாதுளையின் பங்கு

மாதுளை பழமானது மிகவும் இனிப்பான சுவை என்ற காரணத்தினால் நீரிழிவு நோயாளர்கள் கூட இதனை கட்டுப்பாடான அளவுகளில் சாப்பிட்டு வரலாம். மேலும் இந்த மாதுளை பழமானது இன்சுலின் எதிர்ப்புச் சக்தியை பெருக்குவதற்கு இந்த மாதுளை பழம் பெரிதும் பயன்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை

மாதுளை பழத்தில் உள்ள விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து இரத்தக் குழாய்கள் தடிமன் ஆவதை முற்றிலும் தடுக்கின்றன. இதன் மூலம் நமக்கு இருதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பியூசினிக் அமிலம் ஒரு ஒமேகா-5 கொழுப்பு அமிலம் ஆகும். இதனால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை குறைப்பதாக அறியப்படுகிறது. இதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை நன்றாக அதிகரித்து நம் இதயத்தை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

மாதுளை பழத்தில் உள்ள விதைகளில் பொட்டாசியம் ஆனது, இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் ஒரே அளவாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதனால் நம் உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இந்த மாதுளை பழத்தில் உள்ள விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மாதுளை பழத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

மாதுளை பழத்தில் எந்த அளவு ருசி உள்ளதோ அந்த அளவுக்கு அதில் அதீத நற்பண்புகளும் அடங்கியுள்ளன. அதனால் இந்த மாதுளை பழத்தை பல்வேறு விதமாக நம் உண்ணும் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்

மாதுளை பழச்சாறு

மாதுளை பழத்தை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள பழத்தின் முத்துக்களை மட்டும் தனியாகப் பிரித்து அதனை நாம் பழச்சாறு செய்து சாப்பிடலாம்.

மாதுளையில் ஜாம்

மாதுளை பழத்தை நாம் ஜாம் செய்து அதனை ரொட்டி, தோசை மற்றும் கேக்குகள் போன்ற பலவகையான உணவு பொருட்களில் தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.

மாதுளை தோலின் பண்புகள்

மாதுளை பழத்தில் உள்ள தோல்களை நன்றாக சுத்தம் செய்து மற்றும் அதனை நன்றாக காய வைத்து உலர்த்தி பொடி செய்து பின்னர் நன்றாக அதனை காய்ச்சி தேநீர் போல குடித்து வரலாம். மேலும் இதன் தோல்களை நன்றாக காய வைத்து பவுடர் போல அரைத்து முகத்துக்கு பூசி வர முகம் பொலிவு பெரும்.

மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

மாதுளையில் வினிகர்

மாதுளையின் மூலம் செய்த வினிகரை சாலட்களுக்கு சுவைக்காக பயன்படுத்தலாம். மீன் மற்றும் கோழி போன்ற பலவித அசைவ உணவிலும் இந்த மாதுளை பழத்தின் வினிகரை உபயோகிக்கலாம்.

மாதுளை விதைகளை வேறு முறையில் சேர்க்கும் முறை

மாதுளை பழத்தில் உள்ள விதைகளை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் நமக்கு கிடைக்கிறது. மேலும் அனைத்து வகையான காய்கறிகளிலும் கூட்டு மற்றும் பொரியலில் கலந்து சாப்பிடலாம். மேலும் ஐஸ்கிரீம்களில் அலங்காரப் படுத்தி சுவைக்க இந்த மாதுளை விதைகள் நமக்கு பயன்ப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா

மாதுளையில் எண்ணெய்

மாதுளை பழத்தின் மூலம் கிடைக்கும் எண்ணெயை நன்றாக நம் முடியில் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் முடி வேர்களுக்கு  நல்ல ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி முடி நன்றாக வளரும் திறனை தருகிறது.

மாதுளையில் பியூரி

மாதுளை பழத்தை நன்றாக சுத்தம் பின்னர் அதனை உரித்து அதை முடியில் நேரடியாகப் பயன்படுத்தி வரவும். இது போல செய்வதன் மூலம் முடி நன்றாக வளர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

மாதுளை பழத்தின் விதைகளை உட்கொள்வதற்கான சுவையான வழிமுறைகள்

மாதுளை பழத்தில் எந்த அளவுக்கு நல்ல பலன்களும் மற்றும் ஆரோக்கியமும் இருக்கிறதோ அது போல அதன் விதைகளிலும் நிறைய நற்ப்பண்புகள் அடங்கி உள்ளன. அதனால் இந்த மாதுளை பழத்தின் விதைகளையும் சேர்த்து நாம் சாப்பிடுவது நமக்கு அதிக பலன்களை அளிக்கிறது.

மேலும் படிக்க: நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்

நேரடியாக சாப்பிடும் முறை

நமக்கு பசிக்கும் போது மாதுளை பழத்தில் உள்ள விதைகளை நன்றாக வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் நம் வாய்க்கும் நல்ல ஆரோக்கியமான பலன்களை நம்மால் பெற முடியும்.

சாலட்களில் பயன்படுத்துதல்

மாதுளை பழத்தின் விதைகளை பல்வேறு வகையான காய்கறி சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் மற்றும் அதிக சுவையும் நாம் பெற முடியும்.

மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்

தயிரில் சேர்த்தல்

மாதுளை பழம் மற்றும் அதன் விதைகளை நாம் தயிரிலும் கலந்து சாப்பிட பார்ப்பதற்கு ரொம்ப அழகாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும்.

ஓட்ஸில் சேர்த்தல்

நாம் காலை அன்றாட உணவில் ஓட்ஸ் உடன் இந்த மாதுளை பழம் மற்றும் அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிட காலை உணவு சிறப்பானதாக இருக்கும். மேலும் சத்து மிக்க ஒரு உணவாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்