ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா

ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள் நிறைய உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. மேலும் அவற்றில் ஒரு வகையான முக்கிய பழங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

மாம்பழம்

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் .அதிக சுவையுடன் கூடிய பழத்தில் இதுவும் ஒன்று. முக்கனிகளில் முதன்மையானது. சுவை மட்டுமில்லாமல் அதில் மருத்துவ குணமும் நிறந்த பழமும் ஆகும். மாம்பழத்தில் நார்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வட்டமின் சி அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்

மாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:

மாம்பழம் இரத்த சோகையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மாம்பழத்தில் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மாம்பழத்தை அரத்து அதனை முகத்தில் தடவி வர முகப்பருக்கள் வராமல் தடுக்கும். மேலும் வயதான தோற்றத்தை வெளிபடுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும்.மாம்பழம் மட்டுமல்லாமல் அதன் இலைகளும் சர்க்கரை நோய்க்கு தீர்வாகும்.

கண் பார்வை குறைபாடு மற்றும் மாலை கண்ணீலிருந்து நம்மை காக்கும். மாம்பழத்தின் மேல் தோலில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. நரம்பு சம்ப்ந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்க உதவும் இதயத்திற்கும் ,மூளையையும் ,பலப்படுத்தி நோய் அதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் இன்சுலின் அளவை சீராக்குகிறது.

மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா

மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலு பெறும் .கொழுப்புகளை நீக்கவும் வயிற்று புண்களை குணமாக்குகிறது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும்

சிறு நீரக பையில் உள்ள கற்களை கரைக்க உதவும் .மாம்பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நம் இருதயத்தை பாதுகாக்கிறது. இதில் நார் சத்து மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது.இது மலசிக்கலை தடுக்கிறது.மேலும் அதிகளவில் உட்கொண்டால் வயிற்று ஏற்பட வாய்ப்பும் உண்டு.

மாம்பழத்தில் உள்ள பெக்டின் புற்று நோய் வராமல் தடுக்கும். மாம்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. மாங்காயை நறுக்கி நீரில் ஊற் வைத்து பின் அந்த  நீரை பருகினால் இதய நோய், மாரடைப்பு வராமல் தடுக்கும்.

மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

முக்கனிகளில் ஒன்று  வாழைப்பழம். வாழைப்பழத்தின் பொட்டாசியம் , நார்சத்து வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளது.

வாழைப்பழத்தின் மருத்துவ பயன்கள்

உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர நல்ல பலனை தரும். நேந்திரம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டாகும் வாழைப்பழம் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் தரக் கூடியது. குடல்  புண்களை ஆற்றி அல்சர் வராமல் தடுக்க உதவுகிறது .அதிக அளவு பொட்டாசியம் சத்து இருப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்

வைட்டமின் பி6 உள்ள்தால் இது உடலில் சீரான ஆக்ஸிஜனேற்றத்துக்கு உதவுகிறது. கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இது பற்களுக்கு உறுதியளிக்கிறது. இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சரி படுத்த உதவுகிறது. கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழம் மலச்சிக்கலில் இருந்து முற்றிலும் தீர்வு காண உதவுகிறது.

மூல நோய் உள்ளவர்கள் இந்த பழத்தினை எடுத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது. சுறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறது. வாழை பழத்தின் ஐம்பது சதவீதம் நார்சத்து இருப்பதால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினம் ஒரு செவ்வாழை  பழம் சாப்பிட்டு வர வேண்டும். தினமும் வாழை பழம் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.மேலும் பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்கள்

பலாப்பழம்

பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

முக்கனிகளில் ஒன்று  பலாப்பழம் ஆகும். அதிக சுவை கொண்ட பழமாகும். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தயாமின் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது. பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புகள் உள்ளதால் இது குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

பலாப்பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் உடலுக்கும் மற்றும் மூளைக்கும் பலத்தை அளிக்கும். இரத்தத்தை அதிகரிக்கும் பல் தொடர்பான நோய்களை போக்கும் .உடல் சூடு மற்றும் பித்தத்தை குறைக்கு தேனில் கலந்து சாப்பிடுவதால் மூளை நரம்பு வலுப்பெறும். பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அதிகம் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.

பலாப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் பற்களுக்கு எழும்புகளுக்கு வலிமை அளிப்பதற்க்கு உதவுகிறது பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் இதில் நார்சத்து இருப்பதால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு நச்சுகள் அனைத்தும் வெளியேற்றி முகம் பொலிவு பெறும். பலாப்பழத்தல் வைட்டமின் சி உள்ளதால் கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது.

மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

கொய்யாபழம்

மலிவான விலையில் கிடைக்க கூடிய பழத்தில் ஒன்று கொய்யா, கொய்யாவில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது.

கொய்யாபழத்தில் உள்ள மருத்துவ பயன்கள்

கொய்யாபழத்தில் வட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு  ஒரு சிறந்த பழமாக விளங்குகிறது.கொய்ய பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாயு தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. கொய்யாபழம் சாப்பிடுவதால் சளி தொல்லையில் இருது விடுபடலாம்.

உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. கொய்யா பழம் வயிற்று புண்ணை குணப்படுத்துகிறது. மலச்சிக்கலுக்கு சிறந்தது. கர்ப்பினி பெண்களுக்கு நல்லது. புற்றுநோய்க்கு எதிராக செயல்ப்படும். இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த சோகையினை குணப்படுத்தும்.

வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவும் பெறும். தோல் சுருக்கம், கண்கோளாறுகள் விலகும். இது உடல் குளிர்ச்சியை தரும்.

மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்

ஆப்பிள்

ஆப்பிளில் ஊள்ள சத்துக்கள்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

ஆப்பிளில் உள்ள மருத்துவ பயன்கள்

ஆப்பிள்களை அதிக அளவில் உட்கொள்வதால் நுரையீரல் ,பெருங்குடல் மற்றும் குடல் பாதை புற்று நோய் ஆபத்தை குறைக்கும் உடலில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்ட்டால் சருமத்தை இளமையுடம் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மூளை செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிள் இதயத்தை பராமரிக்கின்றது. மலச்சிக்கலை சீராக்குகிறது. மாவுச்சத்து நிறைய நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பை குறைப்பதில் இதயத்திற்கு நல்லது.

ஜீரண சக்தியை மேம்படுத்தும் எழும்புகளை வலுவடைய செய்யும் மூளை செல் அழியாமல் பாதுகாக்கும். முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லை போக்க உதவுகிறது. உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. நல்ல குடல் பாக்டிரியாவை செயலூக்கம் செய்கிறது. வயதானவர்களுக்கு வரும் மாகுலர் சிதைவு மற்றும் கண் புரையில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்கள்

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவாகும் சிறு நீரக கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது.மேலும் உடம்பில் உள்ள கெட்ட  கொலஸ்ட்ரால் குறைய உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க உதவும் .ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் பல வகையான புற்று  நோய்கள் வருவதை தடுக்கும்.

மேலும் படிக்க: நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்

வைட்டன்மின் சி இருப்பதால் தோல் நோயில் இருந்து பாதுகாக்கிறது.பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் இதய நோய வராமல் பாதுகாக்கிறது. நார்சத்து இருப்பதால் செரிமானத்தை சீர்ப்படுத்தி மலசிக்கலை தடுக்கிறது கால்சியம் சத்து இருப்பதால் எழும்பு வலுப்படுத்தி எழும்பு சம்பந்தமான பிரச்சனைகளை போக்குகிறது. பொட்டாசியம் நிறைந்து உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம் ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால் விந்தனுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். கல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுகளை வெளியேற்றி உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும். முடக்கு வாதம் வராமல் தடுக்க உதவும். கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள்

பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் ,மெக்னீசியம், இரும்புசத்து, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளது.

பேரீச்சம்பழத்தின் மருத்துவ பயன்கள்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரவு நன்கு தூகம் வர உடல் பலம் பெறவும் இதை எடுத்து கொள்வது நல்லது. பேரீச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் வராமல் தடுக்கிறது. மேலும் தினந்தோறும் சாப்பிடுவதால் கண்களில் பார்வை திறன் அதிகரிக்கும்.

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கலில் இருந்து தவிர்க்கலாம். இரத்தத்தில் உள்ள கொலஸ்டராலை குறைக்க உதவுகிறது. மேலும் இருதய நோயை தடுக்கிறது. குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுப்பதால் எழும்பு பலம் பெறும். கர்ப்பினி பெண்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் சுக பிரசவமாக உதவுகிறது.

மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

மாதுளைப்பழம்

மாதுளையில் உள்ள சத்துக்கள்

மாதுளை பழத்தில் வைட்டமின் சி,வைட்டமின் கே, கார்போஹைடிரேட், புரதச்த்துகள், பொட்டாசியம், நார்சத்து, இரும்புசத்து மற்றும் புனிகலஜின் எனப்படும் சந்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.

மாதுளையின் மருத்துவ பயன்கள்

மாதுளையை சாப்பிடுவதால் அதிக இரத்த அழுத்தத்தில் இருந்து நம்மை காக்கின்றது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கின்றது. இது நுரையீரலில் எற்படும் பாதிப்புகளை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இரத்த சோகையில் நம்மை பாதுகாக்கிகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும்  மற்றும் இளமையுடன் வைக்க உதவுகிறது.முதுமையை தாமதப்படுத்துகிறது.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்

மேலும் நம் உடலில் புதிய செல்கள் உற்பத்தி ஆவதற்க்கு இதற்கு முக்கிய பங்கு உள்ளது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. பற்களின் ஆரோக்கியதிற்க்கும், வலிமைக்கும் முக்கிய காரணமாக உள்ளது. கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட மாதுளையின் தோலிலும் ஆரோக்கியத்திற்க்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன.

மாதுளை தோலை காய வைத்து பொடி செய்து சுடு நீரில் கலந்து சாப்பிடலாம். இந்த பொடியை தேநீருக்கு பதிலாக கஷாயம் போட்டும் குடிக்கலாம் இதனால் வயிற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சனைகளை தீர்க்கின்றது, வீக்கம், வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் இரத்த போக்கு ஆகியவற்றை குறைக்கிறது. மேலும் மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் உடலில் செரிமானத்தை மேம்படுத்தி மற்றும் கல்லீரலை சுத்தம் செய்கிறது.மேலும் மழை காலங்களில் காலையில் எழுந்தவுடன் மாதுளை தோலை டீ வைத்து குடித்தால் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply