தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்குவது சென்னை ஆகும். சென்னையில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய பலவிதமான இடங்களும் மற்றும் நிறைய கோவில்களும் உள்ளன. மேலும் இந்த பதிவில் சென்னையில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களையும் மற்றும் அவற்றின் வரலாற்றையும் விரிவாக தெரிந்து கொள்வோம்.
சென்னையில் நாம் அவசியம் காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
- மெரினா கடற்கரை
- கலங்கரை விளக்கம்
- அருங்காட்சியகம்
- கபாலீஸ்வரர் கோவில்
- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
- பார்த்தசாரதி கோவில்
- வள்ளுவர்கோட்டம்
- ஆயிரம் விளக்கு மசூதி
- அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில்
- புனித ஜோர்ஜ் கோட்டை
மெரினா கடற்கரை
உலகத்திலேயே மிக நீளமான கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை என்பதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் சர் மவுண்ட்ஸ் ஸ்டுவர்ட் ஆவார். இவர் ஒரு சமயம் மேப்பில் பழம் தாண்டி கடற்கரை ஓரமாக பயணம் செய்தபோது மெரினா கடற்கரை ஓரமாக இருந்த அழகிய மரங்களும் மற்றும் சோலைகளும் அவரை கவர்ந்தன. மேலும் இந்த கடற்கரை பகுதியை சீரமைக்க அடிப்படை வசதிகளை கொண்டு வந்தார். இதனால் மெரினா முதல் சாந்தோம் வரை ஒரு சாலை அமைத்து மக்கள் நடப்பதற்கு வழிவகுத்தார்.
இதனால் மெரினா ஒரு சிறிய நகரம் போல காட்சி அளித்தது. மேலும் இவர்தான் மெரினா என்ற பெயரும் வைத்தார் இதனால் நாளடைவில் மிக அழகாக மாறியது. இந்த மெரினா கடற்கரை இதில் மணல் பரப்பும் மற்றும் குளிர்ந்த காற்றும் மனதை லேசாகவும் மற்றும் சந்தோஷமாகவும் வைக்கும் தன்மை கொண்டது மேலும் இந்த மெரினா கடற்கரைக்கு வருடம் முழுவதும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்கள்
கலங்கரை விளக்கம்
சென்னையில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் இந்த கலங்கரை விளக்கம் ஒன்றாகும். இது சுமார் 150 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் முக்கோண வடிவ கலங்கரை விளக்கம் ஆகும். இதில் பத்து தளம் வரையிலும் உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் 1796 இல் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கை எரிய வைத்தார்கள். அதன் பின் 1894 இல் இந்த விளக்கை மண்ணெண்ணெய் கொண்டு எரிய வைத்தார்கள். மேலும் 1977-ல் இருந்து தான் இங்கு லைட் ஹவுஸ் என்ற ஒரு செயல்பாட்டை உருவாக்கினார்கள். மேலும் இந்த கலங்கரை விளக்கத்தின் உயரம் சென்று பார்த்தால் சென்னை நகரத்தின் மொத்த அழகும் நன்றாக தெரியும்.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்
அரசாங்க அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் சென்னை எக்மோரில் உள்ளது. இந்தியாவில் சுமார் 173 வருடங்களுக்கு மிகப் பழமையான இரண்டாவது பெரிய அருங்காட்சியமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது. ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் நுழைந்த போது அந்த ஆங்கிலேயர்களின் ஒரு சிலரின் முயற்சியால் இந்த அருங்காட்சியகம் உருவாகியது. மேலும் இந்த அருங்காட்சியத்தில் மிகவும் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுகள் மற்றும் பலவிதமான பொருட்களை இங்கே பார்க்க முடிகிறது. மேலும் இந்த பிரம்மாண்டமான அருங்காட்சியத்தை காண வருடம் முழுவதும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா
கபாலீஸ்வரர் கோவில்
சென்னை மயிலாப்பூரில் மிகவும் பழமையான பாரம்பரிய கோவில்களில் இந்த கபாலீஸ்வரர் கோவிலில் ஒன்றாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து இருக்கிறார். சிவனின் தேவாரம் பாடல்களில் இடம் பெற்ற தலங்களில் இதுவும் ஒரு முக்கியமான தலமாகும். இங்கு சிவபெருமான் மேற்கு நோக்கி இருக்கிறார்.
இங்கு மேற்கு நோக்கி இருக்கும் சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கி இருக்கும் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இங்கு பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மயிலாப்பூரில் இந்த கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பெருமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோயிலின் பெருமைக்காகவே இங்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றார்கள்.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
இந்த அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது சென்னை வண்டலூரில் உள்ளது. இது இந்தியாவில் உள்ள இயல் பூங்காவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. இங்கே வந்து சுற்றிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை தரும். இங்கு சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்களும் உள்ளது. சென்னையில் உள்ள இந்த உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் நல்லதொரு வித்தியாசமான மகிழ்ச்சியான அனுபவத்தை இந்த உயிரில் பூங்கா தருகிறது. சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் இதுவும் ஒரு முக்கியமான இடம் ஆகும்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா
பார்த்தசாரதி கோவில்
சென்னையில் உள்ள முக்கிய ஸ்தலங்களில் இந்த பார்த்தசாரதி கோயிலும் ஒன்றாக வருகிறது. முந்தைய காலத்தில் சுமத்திர ராஜன் என்பவர் திருமாலிடம் தங்கள் மகாபாரத்தில் எப்படி எந்த ஒரு ஆயுதமும் போர்க்களத்தில் இல்லாமல் இருந்தீர்களோ அதே போல் இங்கேயும் அவ்வாறு இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இங்கு திருமால் கையில் சங்கு மட்டுமே உள்ளது. ஏனென்றால் பாரதப் போரில் எந்த ஒரு ஆயுதத்தையும் நான் ஏந்த மாட்டேன் என்று கிருஷ்ணர் கூறி இருப்பார்.
அதேபோல் இங்கு திருமாலுக்கு பீஷ்மர் அர்ஜுனனுக்கு எய்த அம்புகளை கிருஷ்ணர் தான் வாங்கிக் கொண்டதால் திருமால் முகத்தில் சில வெட்டு காயங்களை இங்கே பார்க்க முடிகிறது. இந்த திருத்தலத்தில் பெருமாள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் மற்றும் படுத்த நிலையிலும் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறார். இந்த கோவிலும் சென்னை சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒரு கோயிலாக விளங்கி வருகிறது. இங்கே ஏராளமான பக்தர்கள் இந்த பார்த்தசாரதி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றார்கள்.
மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்
வள்ளுவர் கோட்டம்
திருவள்ளுவரை நினைவு கூறும் மற்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைக்கப்பட்ட இடம் தான் இந்த வள்ளுவர் கோட்டம் ஆகும். இங்கு தமிழ் மற்றும் கலையும் ஒருசேர காணலாம். வள்ளுவர் கோட்டத்தில் உள்ளே ஒரு அழகிய ரதம் சிலை வடிவில் உள்ளது. இந்த ரதத்தில் நிறைய சிறப்புகள் அடங்கி உள்ளன. இந்த ரதத்தைச் சுற்றிலும் திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்தின் பெயர்களும் பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த தேருக்கு மூலவர் திருவள்ளுவரே ஆகும்.
வள்ளுவர் கோட்டத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கத்தை தாங்கி பிடிக்க எந்த ஒரு தூண்களும் இங்கு இல்லை. மேலும் இந்த அரங்கத்தின் மேலே 1330 திருக்குறளும் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டு உள்ளது. இது இந்த அரங்கத்தின் தனி சிறப்புகள் ஆகும். இந்த வள்ளுவர் கோட்டம் சென்னையின் மத்திய பகுதியில் அமைந்து உள்ளது. இதுவும் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒரு முக்கியமான இடமாகும்.
மேலும் படிக்க: நன்மைகளை அள்ளித் தரும் நவதானியங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க
ஆயிரம் விளக்கு மசூதி
ஆயிரம் விளக்கு மசூதி என்பது மசூதி கட்டப்பட்ட சில வருடங்களிலேயே மொகரம் மாதம் பத்தாவது நாள் அன்று அசராதினம் என்று அழைக்கப்படும் தியாகத் திருநாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தியாகத் திருநாள் ஆனது ஒருவரது உயிர் தியாகத்தினை நன்றி செலுத்தும் விதமாக செய்யப்படுகிறது. இந்த தினத்தன்று மசூதி சுற்றிலும் ஆயிரம் விளக்குகளை எரிய வைப்பார்கள்.
பல வருட காலமாக இதனை வழக்கமாக செய்து வந்தனர். காலப்போக்கில் இந்த ஆயிரம் விளக்கை எரிய வைப்பதில்லை. வெறும் மொகரம் பத்தாவது நாள் அன்று மட்டும் அசரா தினம் மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மசூதியானது 400 ஆண்டுகள் பழமையான ஒன்றாகும். சென்னையில் அமைந்து உள்ள இந்த மசூதிக்கு உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்கள் இந்த மசூதியை காண வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா
அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில்
சென்னையில் உள்ள திருக்கச்சூர் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் இந்த மருந்தீஸ்வரர் கோவில் ஆகும் இந்த கோவிலில் மருந்தீஸ்வரர் இறைவனாகவும் எருமைக்கு அம்மியும் அருள் பாலிக்கின்றனர் இதன் வரலாறு என்னவென்றால் முந்தைய காலத்தில் ஒரு சமயம் இந்திரன் தான் பெற்ற சாபத்தின் காரணமாக கடும் நோயை பட்டு பெரிதும் அவதிக்குள்ளாகிறார் தேவர்களில் பலர் அவருக்கு பல வைத்தியம் செய்தும் அவருடைய நோயை குணப்படுத்த முடியவில்லை இதனால் அஸ்வினி தேவர்கள் மூலிகை தேடி பூலோகம் வந்தனர். பல மலைகளில் தேடிச் சென்றும் எந்த ஓரு மூலிகையும் அவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. இதனால முடிவில் அவர்கள் நாரதரை சந்திக்கின்றனர்.
நாரதர் ஒரு ஆலோசனை சொல்கிறார் மருதமலை என்று அழைக்கப்படும் இந்த மலையில் குடிகொண்டிருக்கும் சிவனையும் அம்மனையும் வழிபட்டு வந்தீர்கள் என்றால் சிவனின் அருளால் உங்களுக்கு மருந்து கிடைக்கும் என்று நாதர் கூறுகிறார் அதுபோல் அஸ்வினி தேவர்கள் சுவாமி சிவபெருமானை வழிபாடு செய்கிறார்கள் அவர்கள் பிரார்த்தனைக்கு இறங்கி சிவப்பெருமான் மருந்து இருக்கும் இடத்தை காண்பிக்கிறார் இதன் மூலம் அஸ்வினி தேவர்கள் பல மற்றும் அதிபலா என்ற இரண்டு மொழிகளை எடுத்துக் கொண்டு இந்திரனுடைய நோயினை குணப்படுத்தினர்.
இதனால் இந்திரன் நோய்க்கு மருந்து கொடுத்த காரணத்தினால் மருந்தீஸ்வரர் என்று சிவபெருமானுக்கு பெயர் வந்தது சிறிய மலையின் மேற்பகுதியில் இந்த கோயில் அமைந்து உள்ளது இங்கு கிரிவலம் எந்த நேரத்திலும் நடைபெறும் என்பதால் இங்கு உள்ள மூலிகையில் காற்றின் மூலம் நமக்கு எந்த நோயும் வராமல் அந்த நோய்கள் நம்மை விட்டு அகலும் என்று கூறப்படுகிறது இந்த அனைத்து சிறப்புகளால் சென்னை சுற்றுலா தலங்களில் இந்த மருந்தீஸ்வரர் கோயில் ஒரு முக்கிய இடம் ஆகும்
மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்
புனித ஜார்ஜ் கோட்டை
சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையானது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் பிரிட்டிஷ் கோட்டை ஆகும் இந்த கோட்டை ஆனது 1639 ஆம் ஆண்டு கிழக்கிந்தியா ஆங்கிலேயர்களின் முயற்சியால் இந்தியாவில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். மேலும் கோட்டை கட்டப்பட்டதின் மூலம் புதிய வணிக வளர்ச்சி நகரங்கள் போன்றவைகள் இங்கு வளர்ச்சியடை தொடங்கின. சுமார் 1600 ஆம் ஆண்டு வணிக நோக்கத்திற்காக இந்தியாவில் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனி தங்களின் வணிக நோக்கத்திற்காகவும் மற்றும் பாதுகாப்பிற்கும் ஒரு நிலம் தேவைப்பட்டதால் அப்பகுதி தலைவரிடம் நிலத்தை வாங்கினர்.
மேலும் அப்பகுதியில் துறைமுகம் மற்றும் கோட்டைகளை கட்டினர். இந்த கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ஆனது ஏப்ரல் 23ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால் இந்த கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையால் இந்த பகுதியில் புதிய ஜார்ஜ் டான் என்ற குடியிருப்பு பகுதி உருவானது. மேலும் இந்த கோட்டைக்கு பல சிறப்புகள் உள்ளதால் இந்த கோட்டையைச் சுற்றி பார்க்க இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா