தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மாவட்டம் கோயம்புத்தூர் ஆகும். இந்த கோவையில் பல அழகிய சுற்றுலா தலங்ககளும் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும் உள்ளன. மேலும் இந்த கோவையில் உள்ள அழகான சுற்றுலா தலங்களின் சிறப்புக்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக விரிவாக காண்போம்.
கோயம்புத்தூரில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்கள்
- வால்பாறை
- வெள்ளியங்கிரி மலை
- கோவை கொண்டாட்டம்
- ஈஷா யோகா மையம்
- கோவை குற்றாலம் (சிறுவாணி நீர்வீழ்ச்சி)
- ஜி டி நாயுடு கார் அருங்காட்சியகம்
- பிளாக் தண்டர்
வால்பாறை
கோயம்புத்தூரில் பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் மேல் தொடர்ச்சி மலையில் உள்ளது தான் இந்த வால்பாறை இடம் ஆகும். வால்பாறையானது கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள ஒரு மலை ஆகும். முந்தைய காலத்தில் இங்கு மேல மரங்கள், சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் போன்ற பலவகை மரங்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த காடுகளால் ஆனது தான் இந்த வால்பாறை ஆகும். இங்கு மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடமாக இருந்தது. அந்த சமயத்தில் ஆதிவாசிகள் சிலர் இங்கு ஒரு தங்கினார். சுமார் 1800 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து இங்கு தேயிலை தோட்டத்தை உற்பத்தி செய்து வந்து இருக்கிறார்கள்.
மேலும் இயற்கை அருவிகள் மற்றும் நீரூற்றுகள் என தண்ணீர் தேசமாக இந்த வால்பாறை அமைந்து உள்ளது. வெயில் அதிகம் இல்லாமல் மற்றும் குளிர் அதிகம் இல்லாமல் ஒரு ரம்யமான தட்பவெப்பமாக இந்த வால்பாறை உள்ளது. இது பார்ப்பதற்கு நிறைய ஏராளமான சுவாரசியமான பல இடங்கள் உள்ளன. மேலும் கோவையில் உள்ள சுற்றுலா தலத்தில் வால்பாறை ஆனது ஒரு முக்கிய இடத்தை பெற்று உள்ளது. இங்கு வருடம் முழுவதும் ஏராளமான மக்கள் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் வால்பாறையில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களின் இடங்களை கீழே காணலாம்.
மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
வால்பாறையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்
- ஆழியார் அணை
- குரங்கு அருவி
- கூழாங்கல் ஆறு
- நல்லமுடி வியூ பாயிண்ட்
- நீரார் அணை
- சின்னக் கல்லார் அருவி
- சோலையார் அணை
- ஷார்ப்பா பாலம்
- வழச்சல் அருவி
- அதிரப்பள்ளி அருவி
போன்ற பல இடங்கள் வால்பாறையில் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு இடமும் தனித்தனி சிறப்புக்களை கொண்டிருக்கும்.
மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்
வெள்ளியங்கிரி மலை
கோயம்புத்தூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது தான் இந்த வெள்ளியங்கிரி மலை ஆகும். மேலும் சிறுவாணி மலைக்கு அருகில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இந்த வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த மலையின் உச்சி அடைய அடிவாரப் பகுதியான பூண்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் நடக்க வேண்டும். இந்த வெள்ளியங்கிரி மலை ஆனது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5833 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த மலையின் உச்சியில் சக்தி வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
தென்கலை என அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையின் உச்சி அடைய ஏழு மலைச் சிகரங்களை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாதையில் செல்லும் பொழுது வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ஜுனன் வில், பீமன் கழி உருண்டை மற்றும் ஆன்டி சுனை போன்ற பல இடங்களை கண்டு செல்லலாம். மேலும் இங்கு ஏழாவது மலையில் பஞ்சபூத லிங்கத்திற்கு பூஜை செய்து பூஜையை நிறைவு செய்யலாம். கோவையில் உள்ள சுற்றுலா தலத்தில் இந்த மலை ஆனது ஒரு முக்கியமான மலையாகும். இந்த மலை உச்சியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு வெள்ளிப் போர்வையை பரப்பியது போல இங்குள்ள மேகங்கள் அமைந்து உள்ளதால் வெள்ளியங்கிரி மலை என அழைக்கப்படுகிறது. இதுவே வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் ஆகும்.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்கள்
கோவை கொண்டாட்டம்
இந்த கோவை கொண்டாட்டம் கோவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் மற்றும் சிறுவாணி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் அமைந்து உள்ளது. நம் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக பொழுதை கழிப்பதற்கு உகந்த இடமாக இந்த கோவை கொண்டாட்டம் உள்ளது. மேலும் இந்த இடத்தில் வாட்டர் கேம்ஸ், மோதும் கார்கள் மற்றும் மலையேற்றம் போன்ற பலவகை பொழுதுபோக்கு வசதிகள் நிறைய உள்ளது. கோவையில் உள்ள சுற்றுலா தலத்தில் இந்த கோவை கொண்டாட்டமானது மிக முக்கிய ஒன்றான இடமாக விளங்குகிறது.
மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
ஈஷா யோகா மையம்
ஈஷா யோகா மையமானது கோவையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. மேலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 150 ஏக்கர் பரப்பளவு உடன் பரந்து அமைந்து உள்ளது. மேலும் சத்குருவால் நிறுவப்பட்ட இந்த ஈஷா அறக்கட்டளை எந்த ஒரு மதத்தையும் சாராமல் எந்த லாபம் நோக்கமும் இன்றி முழுக்க முழுக்க தன்னார்வ தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு நிறுவனமாக சொல்லப்படுகிறது. சுமார் 1992 இல் கோவில் நிறுவப்பட்ட இந்த ஈஷா யோகா மையம் ஒருவரின் சுயவிழிப்புணர்வை அதிகரிக்க கூடிய பல்வேறு யோகா நிகழ்ச்சியை நடத்துகிறது.
இங்கு பிரம்மாண்டமான 112 அடி கொண்ட ஆதியோகி என அழைக்கப்படும் சிவன் சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் 20000 தனித்தனி இரும்பு தகடுகளை பயன்படுத்தி ஈசா யோகா அறக்கட்டளையின் மூலம் 500 டன் எடை கொண்ட இந்த சிவன் சிலை பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஆனது முதல் யோகி அல்லது ஆதியோகி என்றும் மனித குலத்திற்கு யோகாவை வழங்கிய முதல் குரு அல்லது ஆதி குரு என்றும் சித்திரிக்கப்படுகிறது.
இந்த ஆதியோகி சிலை ஆனது உலக அளவில் பெரிய மார்ப்பளவை கொண்ட சிலை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் வருடம் முழுவதும் சிவராத்திரி அன்று விடிய விடிய சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனால் கோவையில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் ஈசா யோகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் மன அமைதிக்காகவும் மேலும் யோகாவில் அதிக நாட்டம் உடையவர்களும் இங்கே வந்து செல்லலாம். இந்த ஈஷா யோகா மையத்தை சுற்றிப்பார்க்க பலவித இடங்கள் உள்ளன. மேலும் ஈஷா யோகா மையத்திற்கு எங்கிருந்தோ பலவித இடங்களில் இருந்து மக்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் இங்குள்ள இடத்தை சுற்றி பார்க்க திரளாக வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா
கோவை குற்றாலம் (சிறுவாணி நீர்வீழ்ச்சி)
கோவை குற்றாலம் என அழைக்கப்படும் இந்த சிறுவாணி நீர்வீழ்ச்சி ஆனது கோவையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இந்த சிறுவாணி தண்ணீர் ஆனது உலகில் இருக்கக்கூடிய மிகச் சுவையான மற்றும் தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றாக சிறப்பாக விளங்குகிறது. இந்த சிறுவாணி நீர்வீழ்ச்சியை அடைவதற்கு நாம் 1 கிலோ மீட்டர் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.
மேலும் செல்லும் வழியில் அங்கு உள்ள இயற்கையான பசுமையான மலைப் பகுதியும் மற்றும் காடுகளும் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தருகின்றன. கோவையில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் இந்த கோவை குற்றாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கோவையில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் தவிர்க்க முடியாத இடமாக இந்த கோவை குற்றாலம் ஆனது விளங்கி வருகிறது. இந்த கோவை குற்றாலத்தை காண எங்கிருந்தோ மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
ஜி டி நாயுடு கார் அருங்காட்சியகம்
இந்த ஜிடி நாயுடு கார் அருங்காட்சியமானது கோவை அவிநாசி சாலையில் அமைந்து உள்ளது. மேலும் ஜி டி நாயுடு அறக்கட்டளையின் மூலமாக இந்த அருங்காட்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருங்காட்சியம் ஆனது முக்கியமாக கார்களுக்கான ஒரு அருங்காட்சியகம் ஆகும். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பலவகை கார்கள் ஜிடி நாயுடு மற்றும் அவரது குடும்பத்தின் மூலம் கார்களை வாங்கி சேகரிக்கப்பட்டவையாக இங்கு இருக்கிறது. மேலும் சுமார் எட்டு கார்கள் மட்டும் வேறு ஒரு சில நபர்களின் மூலம் வாங்கப்பட்டு இங்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இங்கு அமெரிக்கா இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் 1886 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை உள்ள பல வகையான பெரிய கம்பெனி கார்கள் இங்கே இருக்கிறது. மேலும் கார்களை பற்றி அதிகம் தெரிய வேண்டும் என்ற நாட்டம் உள்ளவர்களும் மற்றும் கார்களில் மேல் அதிகம் ஆர்வம் உள்ளவர்களும் இங்கு வந்து பார்க்கலாம். கோவையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இந்த ஜிடி நாயுடு கார் அருங்காட்சியத்தை காண பலரும் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்
பிளாக் தண்டர்
கோவையில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரு குதூகலமான மற்றும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் உள்ளது தான் இந்த பிளாக் தண்டர் ஆகும். மேலும் ஊட்டி மலை அடிவாரத்தில் இருக்கும் மேட்டுப்பாளயத்தில் அமைந்து உள்ளது பிளாக் தண்டர் ஆகும். மேலும் இந்த பிளாக் தண்டர் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் பரந்து காணப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் ஏராளமான தண்ணீர் விளையாட்டுக்கள் நிறைய உள்ளது. இங்கு கிட்டதட்ட 50 நீர் விளையாட்டுகள் உள்ளன. அதில் ஹாட் ஏர் பலூன், அக்வாரியம், ஹாரர் ஹவுஸ், பறவை பூங்கா மற்றும் வீடியோ கேம்ஸ் போன்ற பலவித விளையாட்டுக்கள் இங்கு உள்ளது.
இங்கு காலை 9 மணி முதல் மாலை 6 வரை திறந்து இருக்கும். இந்த பிளாக் தண்டரின் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 950 ரூபாயும், சிரியவர்களுக்கு 840 ரூபாயும், பள்ளி மாணவர்களுக்கு 700 ரூபாயும், கல்லுரி மாணவர்களுக்கு 810 ரூபாயும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 750 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் கேமரா கொண்டு செல்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் நம்முடைய பொழுதை மிகவும் சந்தோஷமாக கழிப்பதற்கு இந்த பிளாக் தண்டர் இடமானது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க: ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா