இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்

நம்முடைய வாழ்க்கையில் பண்டிகைகள் முக்கிய இடத்தை பெறுகின்றன. இந்த பண்டிகை திருநாளில் நாம் அனைவரும் உற்றார் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல தருணம் உண்டாகிறது. மேலும் இந்த பதிவில் சில முக்கிய இந்து பண்டிகைகளும் மற்றும் அதன் வரலாற்றையும் விரிவாக காண்போம்.

தீபாவளி

தீபாவளி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது தீபாவளிகள் திருநாளாக அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அணிந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். தீபாவளி அன்று லட்சுமி தேவியை நாம் வழிபடுவோம்.

மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்

தீபாவளியின் வரலாறு

முந்தைய காலத்தில் இரண்யாட்சன் என்ற ஒரு அரக்கன் பூமாதேவியை கடத்தி கொண்டு பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். அந்த நேரத்தில் மகாவிஷ்ணு அவர்கள் வராக அவதாரம் எடுத்து அந்த அந்த அரக்கனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அப்போது அந்த நேரத்தில் அவரை ஸ்பரிசம் பட்டு அவர்கள் இருவருக்கும் அரக்க குணம் கொண்ட பவுலன் என்ற ஒரு மனிதன் பிறந்தான். அந்தப் பவுலன் பூலோகத்தை ஆட்சியில் வந்தான் அவனுக்கு பேராசை அதிகமாகிறது.

அதனான் அவன் விண்ணுலத்தையும் நாம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அப்போது பவுலன் பிரம்மாவை நோக்கி சாகாத வரம் ஒன்றை பெறுவதற்காக கடும் தவம் செய்து வருகிறான். அப்பொழுது பிரம்மா அவர்கள் தோன்றி மனிதர்களாகிய யாவரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அதனைக் கேட்ட பவுலன் வேறு ஒரு வரத்தை கேட்டான்.

எந்த தாயும் தன் பிள்ளையை கொல்ல மாட்டாள் என்று தனக்குள் நினைத்துக் கொண்டு ஒரு வரத்தை கேட்கிறான். என் தாய் பூமாதேவியின் மூலமாகத்தான் என் உயிர் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்போதுதான் அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் வந்தது. நரகாசுரன் என்றால் மனிதராக பிறந்து அரக்கனாக மாறியவன் என்று அர்த்தம். மேலும் நரகாசுரன் விண்ணுலகம் சென்று அங்குள்ள தேவர்களை எல்லாம் வென்று அவர்களின் பெண் பிள்ளைகளை ஆயிரக்கணக்கில் கடத்திக் கொண்டு போய் தன் அந்த அந்தப்புரத்தில் வைத்தான். மேலும் பல பொருட்களையும் திருடி கொண்டு வந்து விட்டான்.

மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

அந்த சமயத்தில் தான் மகாவிஷ்ணு அவர்கள் கிருஷ்ணர் அவதாரம் எடுத்து இருந்தார். அதேபோல் மாதிரி பூமாதேவியும் சத்தியபாமாவாக அவதாரம் எடுத்து எடுத்தார். நரகாசுரனின் அட்டூழியத்தை இந்திரன் கிருஷ்ணரிடம் முறையிட்டார். இதனால் பூமாதேவியும் கிருஷ்ணரும் நரகாசுரனை அழிப்பதற்கு புறப்பட்டார்கள். கிருஷ்ணன் நரகாசுரனிடம் போர் புரிய தொடங்கினார். மேலும் நரகாசுரனின் அனைத்து சேனைகளையும் அழித்தார். இதனால் கோபமடைந்த நரகாசுரன் கிருஷ்ணனை தாக்க முயற்சித்தான். மேலும் நரகாசுரன் கிருஷ்ணனை அழிக்க ஒரு அம்பை எய்தான்.

இதனால் அந்த அம்பினால் தான் தாக்கப் பட்டதுபோல் மயங்கி நடித்தார் கிருஷ்ணர். இதனால் சத்தியபாமா கோபம் அடைந்தார். இதனால் கோபம் அடைந்த சத்யபாமா நரகாசுரனை தாக்க முடிவு செய்தார். மேலும் கடுமையான தாக்குதல் மூலம் இறுதியில் நரகாசுரனை கொன்றார் சத்யபாமா. அதன் பின் தான் தெரிய வருகிறது முன்பு தன் மகன் தான் நரகாசுரன் என்று சத்யபாமாக்கு.

இதனால் தன் தவறை உணர்ந்த நரகாசுரன் தன் தாயிடம் ஒரு வரத்தை கேட்கிறான். என்னுடைய இறப்பை அனைவரும் நன்றாக கொண்டாடி மகிழ வேண்டும் என கேட்டு கொண்டான் நரகாசுரன். எனவே நரகாசுரன் இறந்த நாளைத்தான் நாம் அனைவரும் தீபாவளி என்று கொண்டாடி மகிழ்கிறோம். மேலும் இந்த நாளன்று நாம் அனைவரும் புது ஆடையை உடுத்தி இனிப்புகளை பரிமாறிக் கொண்டு, நிறைய பட்டாசுகளையும் வெடித்து சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை தமிழர்களின் திருநாள் ஆகும். மேலும் உழவர்கள் சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதமாக அனைவரும் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். திருநாளில் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் கரும்பு மஞ்சள் கொத்து ஆகவே அனைத்தையும் சூரிய பகவானுக்கு நிவேதனம் செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு கூற்று உள்ளது. அதுபோல் இந்த நல்ல நாளில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நம் வாழ்வில் பொங்கலை போல நன்மைகள் பொங்கி வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை நான்கு நாட்களாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழியின் கடைசி நாள் போகி ஆகும். தை முதல் நாள் தைப்பொங்கலாகவும், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் மிகச்சிறப்பாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை ஆனது பொங்கலுக்கு முதலால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். முதலில் இந்த போகி பண்டிகை போக்கி என்றும் பெயரோடு தான் அழைத்திருக்க வேண்டும். அது நாளடைவில் போகிப் பண்டிகை பண்டிகை என மாறி இருக்கலாம். ஏனென்றால் போக்கு என்பது நம்மில் இருக்கும் அனைத்து கெட்ட எண்ணங்களையும் செயல்களையும் மற்றும் அறியாமையும் போக்குதல் என்பது ஆகும்.

மேலும் நான் பயன்படுத்திய பழைய பொருட்களையும் தீயிட்டு எரிப்பார்கள் மேலும் நம்முடைய கெட்ட எண்ணங்களையும் மற்றும் பழக்கங்களையும் விடுதல் மேலும் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் நம்மிடையே புதிய எண்ணங்களும் மட்டும் புதியனவற்றை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை நம்மில் பிறக்கும். இதுவே போகிப் பண்டிகை ஆகும்.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்

தைப்பொங்கல்

தைப்பொங்கல் ஆனது தை முதலாம் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் அதிகாலையில் புது பானையில் புத்தரிசி இட்டு கரும்பு வெள்ளம் சேர்த்து சூரிய பகவான் முன்பு பொங்கல் வைப்பார்கள். இதன் மூலம் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மற்றும் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் பொங்கலை போல பொங்குவதற்காகவும் இந்த தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்

மாட்டுப் பொங்கல்

பொங்கல் திருநாளில் அடுத்த நாளாக இந்த மாட்டுப்பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இந்த பொங்கலை பட்டி பொங்கல் மற்றும் கன்று பொங்கல் என்றும் கூறப்படுகிறது. மேலும் உள்ளவர்களின் தொழிலுக்கு பெரும்பாலும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மேலும் இந்த நாளில் மாட்டு தொழுவத்தினை நன்றாக சுத்தம் செய்து கால்நடைகளை நன்றாக குளிப்பாட்டி மாட்டு கொம்புகள் நன்றாக சீவப்பட்டு அதற்கு வண்ணம் தீட்டி அதன் கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள். மேலும் சந்தனம் குங்குமம் மற்றும் மாலைகளை கொண்டு மாடுகளை அலங்காரம் செய்வார்கள்.

மேலும் உளவு கருவிகளையும் இவ்வாறு சுத்தம் செய்து மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி அதன் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து மாடுகளுக்கு முன்பு கற்பூர தீபம் காட்டப்படும். மேலும் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் மற்றும் பழம் கொடுப்பார்கள் இவ்வாறு மாட்டு பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

மேலும் படிக்க: நன்மைகளை அள்ளித் தரும் நவதானியங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க

காணும் பொங்கல்

காணும் பொங்கல் பண்டிகை ஆனது பொங்கல் பண்டிகைகளில் நான்காவதாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும் இந்த திருநாமங்களில் நம்முடைய உற்றார் மற்றும் உறவினர்களை காணுதல் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறுதல் போன்ற அனைத்தும் ஆகும். மேலும் பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்படும்.

விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சகாச போட்டிகள் உள்பட பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த காணும் பொங்கல் அன்று சிறப்பாக நடைபெறும். மேலும் இந்த காணும் பொங்கலை கணுப் பண்டிகை மற்றும் கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

விநாயகர் பெருமான் முழு முதற் கடவுளாக அழைக்கப்படுகிறார் இவர் பார்வதி அணையின் மூலமாக பிறக்கப்பட்டவர் மேலும் விநாயகர் பிறந்த நாளை நாம் அனைவரும் விநாயகர் சதுர்த்தியாக சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்.

விநாயகர் சதுர்த்தி உருவான விதம்

முந்தைய காலத்தில் ஒரு நாள் சிவபெருமான் இல்லாத நேரத்தில் பார்வதி அன்னை அவர்கள் நீராடச் சென்றார். மேலும் காவலுக்கு நந்தியை நிற்க வைத்துச் சென்றார். அப்போது சிவபெருமான் உள்ளே வருகிறார். அப்போது வண்டி தேவன் ஈசனை பார்வதி அன்னை அவர்கள் நீரோட சென்று இருப்பதாகவும் மற்றும் காவலுக்கு என்னை இங்கே நிற்க வைத்து சென்று இருப்பதாகவும் என்று அனைத்தையும் நந்தி பகவான் கூறுகிறார்.

அதனால் தாங்கள் உள்ளே செல்ல வேண்டாம் என சிவனிடம் கேட்டுக் கொண்டார் நான் பார்வதி தேவியின் துணைவன் ஆகையால் நான் உள்ளே செல்லலாம் என்னை தடுக்காதே என்று சிவபெருமான் கூறி உள்ளே சென்றார். அப்போது பார்வை தேவி அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காதே என்று நந்தி தேவனிடம் கூறி இருந்தேனே என்றார். அதற்கு சிவபெருமான் நந்தி என் சேவகன், நான் உன் மணாளன் என்பதால் அவர் என்னை தடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்

நந்தியின் செயலால் கோபம் அடைந்த பார்வதி தேவி அவர் செய்தில் தவறு ஏதும் இல்லை என்று நினைத்தார். இருந்தாலும் பாதுகாவலனாக இருப்பவர் யாரையும் உள்ளே விடாதபடி அறிவாளியாகவும், பலசாலியாகவும் தனக்கு நல்ல பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என நினைத்தார் பார்வதி.

அப்படி ஒரு நாள் அதை நினைத்துக் கொண்டு நீராடச் சென்ற பார்வதி தேவி அவர்கள் அவர் பூசிக் கொண்டிருந்த மஞ்சளையும் மற்றும் சந்தனத்தையும் கொண்டு ஒரு உருவம் போல் பிடித்தார். அந்த உருவத்திற்கு அவரே உயிரும் கொடுத்தார். அவரே விநாயகர் ஆவார். அப்படி உருவான விநாயகரை நந்திக்குக்கு பதிலாக காவலாக வைத்து பார்வதி தேவி அவர்கள் நீராடச் சென்றார். மேலும் நந்தியிடம் கேட்டுக் கொண்டதைப் போல யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என விநாயகரிடம் கட்டளையிட்டார் பார்வதி தேவி அவர்கள்.

அப்போது சிவபெருமான் நந்தி மற்றும் பலரும் அங்கே வர அவர்கள் அனைவரையும் விநாயகர் தடுத்து யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதைக் கேட்ட சிவப்பெருமான் நான் பார்வதியின் கணவர் என்று கூறினார். அதை கேட்டும் விநாயகர் உள்ளே அனுமதிக்கவில்லை.

தன்னுடன் இருந்தவர்களை கொண்டு இந்த சிறுவனை இங்கிருந்து அகற்றுங்கள் என்று கட்டளை இட்டுச் சென்றார் அப்போது அவர்கள் அனைவரும் உள்ளே செல்ல நினைத்தார்கள் அப்போது விநாயகர் அவர்கள் அனைவரிடமும் சண்டையிட்டு அவர்கள் அனைவரும் உள்ளே வருவதை தடுத்தார். இதனை கவனித்த சிவபெருமான் அங்கே வந்து விநாயகரின் தலையை தன்னுடைய திரிசூலத்தால் வெட்டினார்.

மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா

விநாயகரின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த பார்வதி தேவி இது நான் உருவாக்கிய பிள்ளை அது தெரியாமல் என் பிள்ளையை எப்படி அநியாயமாக கொன்று விட்டீர்களே என்று சிவபெருமானிடம் கேட்டார் மேலும் அவருக்கு உயிர் அளியுங்கள் என்றும் ஈசனிடம் முறையிட்டார். மேலும் அதற்கு சிவபெருமான் பார்வதி அனைத்தையும் நான் அறிவேன். உடனே பிரம்மதேவன் கணேசனுக்கு உயிர் அளிப்பதற்காக வடக்கே தலை வைத்து படுத்து இருக்கும் ஒரு பிள்ளையின் தலையை கொண்டு வாருங்கள் அதை கணேசனுக்கு வைத்து உயிர் தரலாம் என்று ஆலோசனை கூறினார்.

உடனே இருந்தவர்கள் அப்படியே செய்ய சம்மதம் தெரிவித்து அங்கிருந்து சென்றனர் பல இடங்களுக்கு சென்று எந்த பிள்ளையின் தலையும் கிடைக்கவில்லையே என நினைத்து ஒரு யானை குட்டியின் தலையை கொண்டு வந்தனர். அதை விநாயகருக்கு பொருத்தி உயிரை விட்டுக் கொடுத்தார் சிவபெருமான். இதனால் பார்வதி தேவி அவர்கள் ஈசனிடம் இப்படி யானையின் தலையை பொருத்தி விட்டீர்களே என்று சிவபெருமானிடம் கேட்டார்.

அதற்கு ஈசன் கஜமுக என்ற ஒரு எல்லா உயிர்களையும் துன்புறுத்தி வருவதாகவும் அவனை அழிக்க வேண்டும் என்றால் ஆண் பெண் துணியில்லாமல் பிறக்கும் ஒரு குழந்தை யாக இருக்க முடியும் மேலும் அவன் பார்ப்பதற்கு மனிதனாக இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி இருந்தான். அதனால் அவனை அழிக்கவே கணேசன் இவ்வாறு பிறந்திருக்கிறார் என்றும் மேலும் விநாயகர் முழு முதற்கடவுளாகவும் மற்றும் எந்த ஒரு பூஜை செய்தாலும் அதில் விநாயகருக்கு முதலிடம் என்றும் வரத்தை கொடுத்தார் சிவபெருமான்.

இதனால் விநாயகர் யானை முகத்தோடு நமக்கு காட்சி தருகிறார் நம் அனைவரும் விநாயகரை முழுமுதற் கடவுளாகவும் வழிபட்டு வருகின்றோம். இதனால் இந்த விநாயகர் பிறந்த இந்த நல்ல நாளை விநாயகர் சதுர்த்தியாக நாம் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றோம்.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்

நவராத்திரி

நவராத்திரி என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பண்டிகை ஆகும் நவ என்பது ஒன்பது நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளை கொண்டது என்று அர்த்தம். முந்தைய காலத்தில் மகிஷாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். ஆதிபராசக்தி அவர்கள் ஒன்பது நாட்கள் போர் செய்து அந்த அரக்கனை அழித்தார். மேலும் ஆதிபராசக்தி போர் புரிந்த ஒன்பது நாட்களை நவராத்திரி என்று அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம்.

இதனால் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்களை கொண்ட ஒன்பது தேவியரை நாம் அனைவரும் வழிபடும் பண்டிகை தான் இந்த நவராத்திரி பண்டிகை ஆகும். இதில் ஒன்பது நாட்களை மூன்றாவது பிரிக்கலாம். முதலில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவார்கள். மேலும் இந்த நவராத்திரி நம் வீட்டில் கொலு பொம்மைகள் நிறைய வைத்து நன்றாக அலங்கரித்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

தினமும் ஒவ்வொரு அம்பிகையின் அவதாரத்தை வழிபடுதல் என்றும் வழக்கமாக உள்ளது. இதன் மூலம் தீமையை அழித்து தர்மமே என்றும் வெல்லும் என்பதை இந்த நவராத்திரி பண்டிகை ஆனது நம் அனைவருக்கும் உணர்த்துகின்றது.

மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா

சிவராத்திரி

சிவராத்திரி ஆனது ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ண பற்று சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் நாம் தெரிந்து செய்த பாவம் மற்றும் தெரியாமல் செய்த பாவம் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். மேலும் மகா சிவராத்திரி பற்றிய தகவல்களை இந்த பதிவில் இன்னும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பழைய காலத்தில் பிரம்மனும் அவரால் உருவாக்கப்பட்ட அனைத்து உயிர்களும் அழிந்து விட்டது. இதனால் அதை கண்ட கருணையே உருவமான அம்பிகை அவர்கள் இந்த உலகம் பழையது போல் செயல்பட கடுமையான தவம் புரிந்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம முறைப்படி பூஜை செய்தார்.

மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்

இந்த பூஜையின் பலனாக சிவபெருமான் அம்பிகையின் முன்பு காட்சி கொடுத்தார். அதை கண்ட அம்பிகை ஐயனே அடியேன் தாங்களை தரிசித்த இன்று இரவே எல்லா உயிர்களும் மற்றும் தேவர்களும் உயிர்ப்பெற்று அனைவரும் இன்புற வாழ வேண்டும். மேலும் அவை அனைத்தும் இன்று இரவே நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இந்தக் கோரிக்கையை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார் மேலும் அனைத்து உயிர்களும் அனைத்தும் உயிர் பெற்று விட்டன.

இதனால் சிவராத்திரி அன்று யாரெல்லாம் இரவு முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்கள் செய்த பாவங்களை நீக்கி எல்லா நன்மைகளும் கொடுத்து அருள் புரிய வேண்டும் என உமாதேவி வேண்டி கொண்டார். சிவப்பெருமானும் அப்படியே ஆகட்டும் என உமா தேவிக்கு ஆசி கொடுத்தார்.

மேலும் படிக்க: ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply