முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

நம்முடைய முகத்தை இளமையாகவும் மற்றும் பொலிவாகவும் வைக்க நாம் பல வகைகளில் முயற்சி செய்கிறோம். மேலும் செயற்கையான பல வழிகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு முயற்சி செய்தும் முடிவில் அது பலன் அளிக்காமல் போய் விடுகின்றன. இதனால் இந்த பதிவின் மூலம் நாம் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நம்முடைய முகத்தை எவ்வாறு பொலிவுற செய்ய முடியும் என்பதை விரிவாக காண்போம்.

முகத்தை பொலிவுற செய்யும் சாறுகள் மற்றும் பொருள்கள்

  1. கற்றாழைச் சாறு
  2. பீட்ரூட் சாறு
  3. மஞ்சள் பால்
  4. இளநீர்
  5. எலும்பு சூப்
  6. சிட்ரஸ் கலந்த நீர்
  7. கிரீன் ஸ்மூத்தி
  8. பெர்ரி ஸ்மூத்திஸ்
  9. தக்காளி சாறு
  10. எலுமிச்சை சாறு
  11. புதினா சாறு
  12. ஆப்பிள் சாறு
  13. வெள்ளரிக்காய் சாறு
  14. வெந்தய சாறு
  15. விளக்கெண்ணெய்
  16. பப்பாளி
  17. காப்பி பவுடர்

கற்றாழைச் சாறு

கற்றாழைச் சாறு ஆனது கற்றாழைச் செடியின் இலையில் இருந்து பெரும் ஒரு வகை ஜெல் போன்ற சாறு ஆகும். இந்த கற்றாழைச் சாறுகள் நம் உடலுக்கும் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கும் மற்றும் அழகு சாதனங்களிழும் பெருமளவில் பயன்படுகிறது. கற்றாழை அதன் ஈரப்பதமூட்டும் குணங்களுக்குப் மிகவும் பெயர் பெற்றது.

அதனால்தான் சரும பராமரிப்பு பொருட்கள் பலவற்றில் கற்றாழை இடம் பெறுகிறது. அதே நேரத்தில் கற்றாழைச் சாறு குடிப்பதும் உங்கள் சருமத்தை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள பாலிசாக்கரைடுகள், கொலாஜனை உருவாக்கும் செல்களான பைப்ரோபிளாஸ்டுகளை தூண்டி விடுகின்றன. இதன் மூலம் நம் முகம் நன்றாக மென்மையாக மாற்ற உதவுகிறது.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்

பீட்ரூட் சாறு

பீட்ரூட் சாறு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும். இது உங்கள் சருமத்தில் அதிசயங்களைச் செய்யும். பீட்ரூட்டில் ஆக்சிஜனேற்றிகளும், நைட்ரேட்டுகளும் உள்ளன. அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. உங்கள் சரும செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்க இதற்கு முக்கிய உண்டு. இந்த அதிகரித்த சுழற்சி ஆனது கொலாஜன் உற்பத்தியை மஊக்குவிக்கிறது. இதன் விளைவாக இளமைத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா

மஞ்சள் பால்

மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்காக அறியப்படும் ஒரு மருத்துவ பொருளாகும். இந்த சுவையான பாணம், கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க இந்த மஞ்சள் பாலுக்கு முக்கிய பங்கு உண்டு.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்கள்

இளநீர்

இளநீர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துவது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளும், மினரல்ஸ்களும் சருமத்தை நீரேற்றமாகவும் மற்றும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. உடலில் உள்ள மெட்டபாலிசத்திற்கு தேவையான அனைத்து விதமான மினரல்ஸ்கள் இதில் அடங்கி உள்ளன.

மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

எலும்பு சூப்

எலும்பு சூப்பில் கொலாஜன், அமினோ அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன. இது தோல் ஆரோக்கியத்துக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைநமக்கு வழங்குகிறது. எலும்புருப்பை தவறாமல் குடிப்பது தோல் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்களை குறைக்கவும், ஒட்டுமொத்த தோல் நீரேற்றத்தை ஊக்குவிக்கவும் எலும்பு சூப் பெருமளவில் உதவி புரிகிறது.

மேலும் படிக்க: நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்

சிட்ரஸ் கலந்த நீர்

நமது தோலின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்க நீரேற்றமாக இருப்பது முக்கியம் ஆகும். சிட்ரஸ் கலந்த நீர், அதைச் செய்ய ஒரு புத்துணர்ச்சியூட்டும் வழியாகும். ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் தொகுப்புக்கான முக்கிய ஊட்டச்சத்து ஆகும். உங்களுக்கு விருப்பமான சிட்ரஸ் பழங்களை துண்டு போட்டு, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து குடிக்கலாம். மேலும் இந்த பானத்தின் மூலம் நம் முகம் நன்றாக மென்மை அடைந்து அழகாக மாறுகிறது.

மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்

கிரீன் ஸ்மூத்தி

கிரீன் ஸ்மூத்தி உங்கள் உடலுக்குத் தேவையாள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. கீரை, வாழைப்பழம் மற்றும் அவகேடோ போன்ற பழங்களுடன் தயாரிக்கப்படும் கிரீன் ஸ்மூத்தி, ஊட்டச்சத்து நிறைந்த பானமாகிறது. இதன் மூலம் இந்த பானத்தை நாம் குடிப்பதின் மூலம் முகம் நன்றாக பொலிவாகிறது.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்

பெர்ரி ஸ்மூத்திஸ்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆக்சிஜனேற்றங்கள் நிரம்பி உள்ளன. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும். மேலும் தயிர், பாதாம் பால் அல்லது தேங்காய்த் தண்ணீருடன் பெர்ரிகளை கலந்து ஸ்மூத்தியாக தயாரித்து பருகலாம். இது உங்கள் சருமத்துக்கு, உள்ளே இருந்து ஊட்டமளிக்கும் ஒரு சுவையான ஸ்மூத்தியாக இருக்கும்.

மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

தக்காளி சாறு

தக்காளி சாற்றில் லைகோப்பீன் என்னும் சத்து உள்ளது. இது சருமத்தை பொலிவுடன் வைக்கிறது. ஒரு தக்காளியை எடுத்து அதை பாதியாக வெட்டி பின்னர் அதில்  வெள்ளை சர்க்கரையை கொண்டு நமது உடலின் தோலில் நன்றாக இரண்டு அல்லது மூன்று நிமிடம் தேய்க்க வேண்டும். பின்னர் இருபது நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பின்பு சாதாரண தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் நல்ல பொலிவினை பெற முடியும்.

மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகம் காணப்படுகிறது. இது சருமதிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் முக்கதில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகதை நன்றாக பொலிவுர செய்ய பெரிதும் உதவுகிறது. எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து நன்கு முகத்தில் தடவி பத்து அல்லது இருபது நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் உள்ள சுறுக்கங்கள் நீங்கி முகம் பொலிவடைய காரணமாக அமைகிறது.

மேலும் படிக்க: ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா

புதினா சாறு

புதினா சாற்றில் நம் முகத்தை பொளிவாகவும் மற்றும் மென்மையாகவும் மாற்றுவாதற்கான நிறைய சத்துக்கள் அடங்கி இதில் அடங்கி உள்ளது. புதினாவை நன்கு அரைத்து அதில் உள்ள தண்ணீரை நன்கு வடிகட்டி மூலம் எடுத்து பின்னர் அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி அழகான தோற்றத்தை நமக்கு வழங்குகிறது.

மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா

ஆப்பிள் சாறு

ஆப்பிள் சாற்றில் ஹைராக்சி ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது நம்முடைய சருமத்தில் இழந்த செல்களை நீக்கி நம் முகத்திற்கு பிரகாசத்தை கூட்டுகிறது. ஆப்பிள் பழத்தின் மூலம் அதில் உள்ள சாற்றை எடுத்து அதை நன்றாக முகத்தில் தடவி ஊற வைக்க வேண்டும். அதன்பின் முகத்தை நன்றாக கழுவுவதன் மூலம் நம் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி ஒரு நல்ல பலனை பெற முடியும்.

மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்

கேரட் சாறு

கேரட் சாற்றில் வைட்டமின் A உள்ளது. இந்த கேரட் சாற்றின் மூலம் நம் முகம் பொலிவாகி முகத்தை இளமையாக வைக்க உதவுகிறது. கேரட்டை நன்கு அரைத்து அதன் மூலம் கிடைக்கும் சாற்றினை எடுத்து நன்கு முகத்தில் தடவி வர நம் முகத்தில் நல்ல மென்மையையும் மற்றும் ஆரோக்கியத்தை பெற முடியும்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் மூலம் நமக்கு கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் சாறு ஆனது நம் முகத்தில் உள்ள சருமத்தை குளிர்ச்சியாக வைக்கிறது. மேலும் நம் முகத்தில் வீக்கத்தை குறைக்கவும் பெரிதும் பயன்படுகிறது. இந்த வெள்ளரிக்காய் சாற்றினை நாம் நம் முகத்தில் தடவி வர முகத்தில் ஒரு நல்ல பொலிவினை பெற முடியும். மேலும் இந்த வெள்ளரிக்காயை நமது கண்ணுக்கு பயன்படுத்துவதன் மூலம் கண்ணை சுற்றியுள்ள கருவளையம் நீங்கி கண்கள் நன்றாக குளிர்ச்சி பெறுகிறது.

மேலும் படிக்க: நன்மைகளை அள்ளித் தரும் நவதானியங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க

வெந்தய சாறு

நாம் இரவு தூங்கும் முன்பு வெந்தயத்தை நன்கு ஊற வைத்து பின்னர் மறுநாள் அரைத்து முகத்தில் தடவி வர நம் முகத்தில் உள்ள எண்ணெய் வடிதல் மற்றும் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. வெந்தயத்தின் மூலம் ஊற வைத்த நீரினை சிறிது ஒரு காட்டன் துணி கொண்டு நன்கு நனைத்து முகத்தில் தடவி வர நொடியில் முகம் பளபளப்பாகும். மேலும் இந்த வெந்தயத்தை ஊற வைத்து அதனுடன் பாலினை கலந்து முகத்தில் தடவி ஒரு 15 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவினால் முகம் நன்றாக மென்மை அடையும்.

மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்

விளக்கெண்ணெய்

நம் முகம் நன்கு பொலிவு பெற விளக்கெண்ணெய் ஒரு சிறந்த நிவாராணியாக உள்ளது. விளக்கெண்ணெயை நம் முகத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து சுமார் 1 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நன்கு கழுவி எடுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் ஆகாமல் தடுப்பதற்கு இந்த விளக்கெண்ணெய் நமக்கு பெருமளவில் பயன்படுகிறது.

மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்

பப்பாளி

பப்பாளி முகத்தில் உள்ள உயிரற்ற செல்களை அகற்றுகிறது. மேலும் நம் முகத்தில் காணப்படும் சுருக்கங்களை நீக்குகிறது. பப்பாளி நமது முகத்தில் நல்ல நிறம் தருவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் பப்பாளி ஆனது நம் முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதற்கும் மற்றும் சருமத்தை மென்மையாக மாற்றுவதற்கும் பெரிதும் உதவி புரிகிறது. மேலும் முதுமை தோற்றதை சீக்கிரமாக காட்டாமல் முதுமையை தாமதப்படுத்துகிறது. நன்றாக பழுத்த பப்பாளி ஒன்றை எடுத்து அதில் உள்ள சாற்றை முகத்தில் நன்றாக தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர நம் முகத்தில் உள்ள இழந்த செல்களை அளித்து முகம் பொலிவு பெற செய்கிறது.

மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்

காப்பி பவுடர்

நமது முகத்தை அழகாக மாற்றுவதற்கு காப்பி பவுடர்க்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நம் முகத்தை இளமையாக வைத்திருக்கவும் மற்றும் சுறுக்கங்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும் நம் முகத்தில் நிறத்தை அதிகரிக்க பயன்படுகிறது. முகத்தில் கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள் இருப்பவர்கள் காப்பி பவுடர் ஒரு ஸ்பூன், பால் 2 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் எடுத்து இந்த மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி சுமார் இருபது நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன்பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நம்முடைய முகத்தில் விரைவில் நல்ல பலனை பெற முடியும்.

மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply