முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

இந்து மதத்தில் மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒருவர். முருகப்பெருமான். கந்தன், கடம்பன் கதிவேலன் எனப்பலவித பெயர்களால் அழைக்கப்படுவர் தான் முருகப்பெருமான், அவர் சிவபெருமானும் பார்வதியும் இணைந்து உருவாக்கிய ஆறு குழந்தைகளில் ஒருவர். இந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாக இணைந்து முருகனாக அவதரித்தார். முருகன் என்ற தெய்வம் ன்பது பொதுவாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ தியாகராஜர் கோயிலின் முக்கிய தேவனை குறிக்கிறது.

முருகப்பெருமானின் மற்றொரு பெயர் தியாகராஜர் ஆகும். முருகப்பெருமான் பக்தர்களுக்கு ஒளி, அறிவு மற்றும் அனைத்து துன்பங்களை அகற்றும் கருணை மயமான தெய்வமாக கருதப்படுகிறார். முருகப்பெருமான் நம் தமிழகத்தில் சுப்ரமணிய சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்கு அறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கியமான கோயில்கள் உள்ளன. முருகனின் அறுபடை வீடுகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்

திருப்பரங்குன்றம் என்னும் முதலாம் அறுபடை வீடு

நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் ஸ்வாமிகள், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலம் என்றும் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது. திருப்பங்குன்றத்தை பற்றி நிறைய தகவல்கள் உள்ளன. சிவபெருமான் அன்னை பார்வதிக்கு மந்திர உபதேசம் செய்த போது அன்னையின் மடியில் இருந்த முருகன் அதை நன்றாக கவனமாக கேட்டு அதனை உள் வாங்கி கொண்டார்.

ஆனால் ஒரு குருவிடம் இருந்து நேரடியாக மந்திர உபதேசம் பெறாமல் இப்படி செய்தது தவறு என கருதி இதற்கு பரிகாரமாக குரு ஸ்தானத்தில் இருந்த சிவபெருமானே தனக்கு காட்சி கொடுத்து தன்னுடைய தவறை மன்னிக்கும் வரை தவம் இருக்க போவதாக உறுதி எடுத்துக்கொண்டார். தன் தலத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் மதுரைக்கு தென்மேற்கில் இருக்கும் சத்யகிரி என்ற திருத்தலம் . அதுவே இன்றைய திருப்பரங்குன்றம்.

பரம்பொருளாகிய சிவபெருமான் ஒரு குன்று வடிவில் அருள்பாலித்து கொண்டு இருக்கும் ஒரு சக்தி மிக்க தலம் இந்த திருப்பரங்குன்றம் சிவபெருமானின் முக்கிய ஸ்தலமாகிய இந்த திருப்பரங்குன்றம் பின் நாட்களில் முருகனின் வாழ்க்கையில் ஒரு பெரும் பங்காற்றிய காரணத்தினால் சிவனின் சத்யகிரி என்பதை விட முருகனின் திருப்பரங்குன்றம் என்ற பெயரே நிலைத்து நின்றது.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்

திருச்செந்தூர் என்னும் இரண்டாம் அறுபடை வீடு

திருச்செந்தூர் என்னும் முருகனின் இரண்டாம் வீடு எப்படி உருவாகியது என்றால் ஒருநாள் பிரம்ம, விஷ்ணு, இந்திரன் மற்றும் தேவர்கள் எல்லாரும் சிவபெருமானை காண கைலாயத்திற்கு ஓடி வந்தார்கள். அரக்கன் சூரபத்மன் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அவன் தேவர்களை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், அந்த சூரனை அழித்து எங்கள் அனைவரையும் காக்குமாறு சிவபெருமானிடம் முறையிட்டனர். அதற்கு சிவபெருமான் அனைவரும் கவலைபடாதீர்கள். என் மகன் முருகன் இருக்கிறான் உங்கள் அனைவரையும் அவன் காப்பாற்றுவான் என கூறினார்.

உடனே சிவபெருமான் முருகனை அழைத்திரு ஒரு சக்தி வாய்ந்த அற்புத வேல் ஒன்றை முருகன் கையில் கொடுத்து நீ அந்த சூரனை போரில் வென்றுவா என முருகனை அனுப்பி வைத்தார் சிவபெருமான். முருகனும் சரி என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார். உடனே அங்க வந்த நாரதர் நீங்கள் சூரபத்மனை வெல்ல வேண்டுமென்றால் அவன் தம்பி தாரகனை வெல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு முருகனும் சரி நன்றி என நாரதரிடம் கூறினார். முருகன் வீரபாகுவிடம் தாரகனை வென்று வருமாறு கூறினார். வீரபாகுவும் பல நாட்களாக போர் புரிந்தும் தாரகனை ஜெயிக்க முடியவில்லை.

மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

இதனால் முருகனே அங்கே வந்து தாரக இதோ என் அப்பா எனக்கு கொடுத்த இந்த அற்புத வேலை கொண்டு உன்னை வெல்கிறேன் என கூறினார். பின்னர் அந்த வேல் தரகனின் தலையை கொய்து மறுபடியும் முருகனிடமே வந்து சேர்ந்தது. அடுத்தது அந்த சூரபத்மனை வெல்ல முருகன்பெருமான் முடிவெடுத்து அங்கிருந்து புறப்பட்டார். சூரபத்மன் ரொம்ப பலசாலி. இருப்பினும் பல நாட்களாக போர் புரிந்து இறுதியில் முருகப்பெருமான் அந்த சூரபத்மனை அந்த அற்புத வேல் கொண்டு இரண்டு பாகங்களாக பிரித்தார்.

தன் தவறை புரிந்து கொண்டு முருகனிடம் மன்னிப்பு கேட்டான் அந்த சூரபத்மன். முருகனும் அவனை மன்னித்து அவன் ஒரு பாகத்தை சேவலாகவும் இன்னொரு பாகத்தை மயிலாகவும் மாற்றி தன்னுடையே வைத்து கொண்டார். பின்னர் திருச்செந்தூரை அடைந்தார். அதன் பின் தான் இங்கு கோவில் உருவானது. இப்படிதான் இங்கு திருச்செந்தூர் முருகப்பெருமானின் கோவில் உருவானது.

மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்

பழனி என்னும் மூன்றாம் அறுபடை வீடு

பழனி என்னும் மூன்றாம் அறுபடை வீடு மதுரைக்கு அருகில் இருக்கும் இந்த ஊரானது மிகவும் பிரபலமானது. அதே போல் இந்த கதையும் ரொம்ப சுவாரசியமானது. ஒருநாள் கைலாயத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் என எல்லாரும் இருந்தனர். அப்போது அங்கே நாரதர் வந்தார். என்னிடம் ஒரு பழம் உள்ளது. அதை தங்களுக்கு தரவே இங்கு வந்தேன் என்றார். உடனே முருகப்பெருமான் எனக்கு இந்த பழம் வேண்டும் என கேட்டார். அதற்கு விநாயகர் இல்லை வயதில் பெரியவன் நான் அதனால் எனக்கு தான் இந்த பழம் வேண்டும் என கூறினார். அதற்கு முருகன் இல்லை பெரியவர்கள் சிறியவர்களுக்கு விட்டு கொடுப்பது தான் அழகு. அதனால் அந்த பழத்தை எனக்கே தர வேண்டும் என்று கூறினார். அதன்பின் இருவரும் சண்டை போட்டு கொண்டனர். இதனை கவனித்த சிவபெருமான் ஒரு யோசனை செய்தார்.

நீங்கள் இருவரும் சண்டை போட வேண்டாம். நான் ஒரு போட்டி உங்கள் இருவருக்கும் வைக்கிறேன். அதில் யார் ஜெயித்து காட்டுகிறீங்களோ அவர்களுக்கே இந்த பழம் என்று சிவபெருமான் கூறினார். உடனே முருகனும், விநாயகரும் அந்த போட்டிக்கு ஒப்பு கொண்டனர். அதன்பின் சிவபெருமான் போட்டியினை அறிவித்தார். நீங்கள் இருவரும் இந்த உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும். அதில் யார் முன்னர் வருகிறார்களோ அவர்களுக்கே இந்த பழம் என்று கூறினார்.

மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்

உடனே முருகன் தன்னுடைய மயிலை எடுத்து கொண்டு உலகத்தை சுற்றி வர புறப்பட்டார். இதனை கவனித்த விநாயகர் என்னுடைய வாகனம் எலி மிகவும் சிறியதாக உள்ளதே நான் எப்படி இதில் ஏறி உலகத்தை சுற்றி வர முடியும் என யோசித்தார். அப்போது விநாயகருக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கே இருந்த நாரதரிடம் நாரதரே எல்லாம் சிவமயம் என்று சொல்வார்களே அப்படி என்ன என்றால் என்று கேட்டார். அதற்கு நாரதர் உலகத்துக்கே அம்மையப்பனாக விளங்கும் சிவனும் பார்வதியும் இந்த உலகம் முழுவதும் நிறைந்த்து இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதை கேட்ட விநாயகர் அப்டி என்றால் என் தந்தையும், தாயையும் சுற்றி வந்தாலே இந்த உலகத்தை சுற்றி வந்ததாக தானே அர்த்தம் என்று கேட்டார். அதற்கு நாரதர் நீங்கள் சொல்வதும் சரி தான் என்று கூறினார்.

அதன்பின் விநாயகர் தந்தையும், தாயையும் சுற்றி வந்து பழத்தை பெற்று கொண்டார். இதை உலகம் சுற்றி கொண்டு இருந்த முருகன் கவனித்தார் மற்றும் மிகவும் கோவம் கொண்டார். அது எப்படி நான் தானே இந்த உலகை ஒழுங்காக சுற்றி வந்தவன், அப்படி இருக்க எப்படி இந்த அண்ணனுக்கு பழத்தை கொடுத்தீர்கள், நான் இங்கே இருக்க மாட்டேன் என்று கூறி எல்லாவற்றையும் அகற்றிவிட்டு ஒரு துறவி போல அங்கிருந்து புறப்பட்டார். அங்கிருந்து சென்று ஒரு மலை மேலே நின்றார். ஒரு பழத்திற்காக முருகன் சண்டை போட்டு வந்து நின்ற காரணத்தினால் இந்த மலை பழனி மலை என்ற பெயர் பெற்றது.

மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

சுவாமி மலை என்னும் நான்காம் அறுபடை வீடு

தந்தைக்கே உபதேசம் செய்த மலை இந்த சுவாமி மலை என்ற பெயர் இதற்கு உண்டு.ஒரு நாள் முருகனும் வீரபாகுவும் விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியே பிரம்மா வந்தார். தன்னை கவனிக்காமல் பிரம்ம சென்றதை பார்த்த முருகன் பிரம்மனிடம் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேலை என கேட்டார். அதற்கு பிரம்மா என் பெயர் பிரம்மா நான் சிவபெருமானின் அருளால் படைக்கும் தொழிலை செய்கிறேன் என்றார். அதன்பின் முருகன் அவரிடம் பிரணவ் என்னும் மந்திரத்தின் பொருளை கேட்டார். அதற்கு பிரம்மா யோசித்து எனக்கு தெரியாது என கூறினார்.

அந்த பொருளை சொல்லாத சொல்லாத காரணத்தினால் பிரம்மாவை சிறைபிடித்தார். அங்கிருந்து வந்த சிவபெருமான் பிரம்மனை விடுவிக்க முருகனிடம் கேட்டார். அதற்கு முருகன் தாங்கள் அந்த பொருளை கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் ஏதும் தெரியாததுபோல் எனக்கும் தெரியாது என கூறினார். அதற்கு முருகன் நீங்கள் கையை கட்டி வாயை மூடி கேட்டால் உங்களுக்கு அதன் பொருளை சொல்கிறேன் என்று முருகன் கூறினார். சிவபெருமானும் அவ்வாறே செய்ய முருகன் தன் தந்தை காதில் அந்த பிரணவ் மந்திரத்தின் பொருளை கூறினார். இதனால் தான் சுவாமி மலை உருவாகியது.இது கும்பகோணம் அருகில் உள்ளது.

மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்

திருத்தனி என்னும் ஐந்தாம் அறுபடை வீடு

திருத்தனி  வள்ளி திருமணம் நடந்த ஊராகும். நம்பிராஜன் என்ற ஒரு வேடன் இருந்தான், அவனுக்கு வள்ளி என்ற ஒரு பெண் இருந்தாள். அப்போது அவள் சிவபெருமானிடம் முருகனே எனக்கு கணவராக வேண்டும் என்று வேண்டினாள். அப்போது அதனை கவனித்த நாரதர் முருகனிடம் சொன்னார் அதற்கு முருகன் வள்ளியை திருமணம் செய்ய போகும் நேரம் வந்து விட்டது. அதற்கு நான் ஒரு சிறு விளையாட்டை விளையாட போகிறேன் என்றார். அதன்பின் முருகன் ஒரு வேடன் போல் வேடமணிந்து வள்ளி இருக்கும் இடத்துக்கு சென்றார். முருகனை பார்த்த வள்ளி பயத்தால் முருகனிடம் நீ யார் என்று கேட்டாள். அதற்கு முருகன்  பெண்ணே நீ அழகாய் இருக்கிறாய் எனக் கூற, அதற்கு வள்ளி என்ன கலாட்டா செய்கிறாயா என்று கேட்டாள்.

அதற்குள் நம்பிராஜன் தன் ஆட்களுடன் வரும் சத்தத்தை கேட்டு முருகன் அங்கிருந்து மறைந்து ஒரு மரமாக மாறினார், பின் அவர்கள் சென்ற பிறகு ஒரு அழகிய வாலிபனாக மாறினார். அதை பார்த்த வள்ளி என்ன வித்தை காட்டுகிறாயா என்று கூறினாள். நான் என் முருகனை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறினாள் இதனை கேட்ட முருகன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்

உடனே அங்கிருந்து மறைந்து வேறொரு விளையாட்டை நடத்த திட்டமிட்டார். அவ்வழியே விநாயகர் வந்தார். முருகன் தன் அண்ணனை கண்டு ஒரு உதவியை கேட்டார். தாங்கள் ஒரு யானை உருவில் வந்து வள்ளியை பயமுறுத்த வேண்டும் அப்போது நான் வள்ளியை காப்பாற்றுவது போல் வருவேன். விநாயகரும் தம்பிக்கு உதவுவதற்காக யானை போல் வள்ளி இருக்கும் இடத்திற்கு வந்தார்.

அதை பார்த்த வள்ளி என்னை காப்பாற்றுங்கள் என்று கதறினாள் . அப்போது அந்த வழியாக முருகன் ஒரு கிழவன் போல் வந்தார். அவர் மீது வள்ளி மோதினால், அதற்கு அந்த கிழவன் என்னவாயிற்று என்று கேட்டார் அதற்கு வள்ளி என்னை ஒரு யானை துரத்தி கொண்டு வருகிறது. யானை தானே அது ஒன்றும் செய்யாது என்று கூறினார். யானையை பார்த்த கிழவன் யானையே போ என்று கூறினார் யானையும் திரும்பி சென்று விட்டது.

என்னை காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி நான் என் தந்தையிடம் கூறி உங்களுக்கு பரிசுகளை வாங்கி தருகிறேன் என்றாள். எனக்கு பரிசாக நீ தான் வேண்டும் என்று கேட்டார். பின் விளையாட்டு போதும் என நினைத்து முருகன் தன் நிஜ உருவத்தை காட்டினார். பின் இருவருக்கும் திருமணம் நன்றாக நடந்தது. திருத்தனி சென்னை அருகில் உள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா

பழமுதிர்ச்சோலை என்னும் ஆறாம் அறுபடை வீடு

ஔவையார் என்னும் ஒரு பாட்டி இருந்தார். அவருக்கு முருகன் மீது பக்தி அதிகம். அந்த பாட்டி மதுரைக்கு சென்று கொண்டிருந்த போது அங்கு ஒரு மரத்தை கண்டார். சிறிது நேரம் ஒய்வு எடுத்து செல்லலாம் என்று முடிவெடுத்தார். அப்போது அந்த மரத்தடியில் பாட்டி பாட்டி என்று ஒரு குரல் வந்தது. ஔவை அது யார் என்று தேடினார்.  அப்போது அந்த மரத்தின் மேல் ஒரு சிறுவன் இருந்தான்.  பாட்டி நான் தான் உங்களை அழைத்தேன் என்று கூறினான்.

ஔவை அந்த சிறுவனிடம் நீ யாரப்பா என்று அந்த சிறுவனிடம் கேட்க, அதற்கு அந்த சிறுவன்  நான் ஒரு ஆடு மேய்ப்பவன் இந்த மரத்தின் உள்ள நாவற்பழம் மிகவும் சுவையாக இருக்கும். அதனை சுவைப்பதற்காக வந்தேன். உனக்கும் வேண்டுமா என்று கேட்டான். அதற்கு என் அப்பன் முருகன் ஞானபழமாக இருக்க எனக்கு எதற்கு இந்த நாவற்பழம் என்று கூறினார். ஒரு தடவை சுவைத்து பாருங்கள் என்று அந்த சிறுவன் கூறினான். உடனே அந்த பாட்டி சரி என்று கூற உனக்கு சுட்ட பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா என்று கூறினான்.

மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்

ஔவை பாட்டிக்கு எப்படி பழத்தில் சுட்ட பழம் சுடாத பழம் என்று குழம்பினார். உடனே எனக்கு சுடாத பழமே கொடு என்று கேட்க, அந்த சிறுவன் அந்த மரத்தை உலுக்கினான் அப்போது மரத்தின் கீழே பழங்கள் விழுந்தது உடனே அந்த பாட்டி பழத்தில் தூசி இருந்ததால் ஊதிக்கொண்டு இருந்தார். என்ன பாட்டி பழம் சுடுகிறதா என்று சிறுவன் கேட்டான். நான் சுடாத பழம் தானே கொடுத்தேன் என்றான்.

ஔவை பாட்டி அப்படியே அசந்து போய் அந்த சிறுவனை நீ யாரப்பா என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் உடனே முருகனாக காட்சி அளித்தார். ஔவை பாட்டி முருகனை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இதுவே பழமுதிர்ச்சோலை உருவான கதையாகும்.

மேலும் படிக்க: நன்மைகளை அள்ளித் தரும் நவதானியங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply