நவ என்பது ஒன்பது நவதானியங்கள் என்பது ஒன்பது வகையான தானியங்களை கொண்டுள்ளதாகும். இந்த ஒன்பது நவதானியங்கள் நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த நவதானியங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் அன்றைய கால கட்டங்களில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். நம் பாரம்பரிய உணவு பழக்கங்களில் இந்த நவதானியங்கள் ஒரு பெரும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த நவதானியங்களின் அனைத்து விதமான சிறப்புகளையும், நன்மைகளையும், மற்றும் அதன் முக்கிய பயன்களையும் இந்த பதிவில் விரிவாக காண்போம்.
மேலும் படிக்க: நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்
நவதானியங்கள் ஒன்பது வகைகள் ஆகும்
- கோதுமை
- நெல்
- துவரை
- பச்சைப் பயறு
- கொண்டைக்கடலை
- மொச்சை
- எள்
- உளுந்து
- கொள்ளு
கோதுமை
கோதுமை நம் நாட்டின் மிக முக்கிய தானிய வகைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோதுமையானது இந்திய அளவில் பெரிய பரப்பளவில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. நம்முடைய உணவு பழக்கங்களில் கோதுமைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த கோதுமையானது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே உபயோகப்படுத்தப்படும் முக்கிய தானியமாகும். இந்த கோதுமையில் பல வகையான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கோதுமையை பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா
கோதுமையின் வகைகள்
- முழு கோதுமை
- சுத்திகரிக்கப்பட்ட கோதுமை
- மருதாணி கோதுமை
கோதுமையின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
கோதுமையில் கார்போஹைட்ரேட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் புரோட்டின் போன்ற அனைத்து விதமான சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளான. கோதுமை செரிமானத்தை நன்றாக நடக்க பெரிதும் உதுவுகிறது. இது உடல் நலத்தை காக்கவும் மண்டையியல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தவும் உதுவுகிறது. மேலும் கோதுமையில் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகளவில் இருக்கிறது.
கோதுமையில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைத்து இருதயத்தை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது. மேலும் இந்த நார்ச்சத்துக்கள் நமக்கு ரொம்ப நேரம் பசியை தாங்கும் தன்மை கொண்டது. இதனால் நாம் அதிக அளவில் உணவு உண்பதை தடுத்து எடை இழப்புக்கு காரணமாக அமைகிறது. மேலும் கோதுமை நம் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நமக்கு நீரிழிவு நோயை தடுத்து நம்மை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது.
மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்
நெல்
நெல் நம் நாட்டின் பிரதான தானியமாக விளங்குகிறது. மேலும் நெல் ஒரு முக்கியமான உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. இது அரிசி உற்பத்திக்காக பெரும்பாலும் பயன்படுகிறது. மேலும் இந்த நெல் ஆனது விவசாயிகளின் பிரதான தொழிலாகவும், நம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் ஆனது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல இடத்தில் பிரதானமாக வளரும் தன்மை கொண்டது.
நெல்லின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
நெல் முக்கியமா அரிசியாக மாற்றுவதற்கு பயன்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் பிற இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளததால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. மேலும் நெல்லில் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. நெல்லில் பல ஆயிர வகையான வகைகள் உள்ளன. அவை ஓவ்வொன்றும் தனித்தனியான சுவை மற்றும் பண்புகளை கொண்டுள்ளது.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்
துவரை
துவரை என்பது ஒரு முக்கியமான பருப்பு வகைகளில் ஒன்டர்காக உள்ளது. மேலும் துவரை அதிகமான புரதமும் மற்றும் நார்சத்துக்களையும் கொண்ட பருப்பினமாகும். இவை இந்தியா உள்ளிட்ட பல வெப்பமண்டல இடங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. மேலும் இந்த துவரை நம் நாட்டின் விவசாயிகளுக்கு அடிப்படை தொழிலாக விளங்கி உள்ளது. மேலும் துவரைக்கு சத்தான பருப்பு என்ற பெயரும் இதற்கு உண்டு
துவரையின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
துவரையில் புரதங்கள், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. மேலும் துவரை செரிமானத்தை அதிகப்படுத்தவும், நம் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் இரத்த சோகையை போக்குவதற்கும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவற்கும் பெரிதளவில் பயன்படுகிறது. மேலும் துவை சைவ பிரியர்களுக்கு முக்கிய உணவாக உள்ளது. மேலும் துவை நம் அன்றாட சமையலில் சாம்பார் மற்றும் பல வகையான கூட்டு செய்து பயன்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்
பச்சைப் பயறு
பச்சைப் பயறு வகைகள் சிறியதாகவும் பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. இதற்கு மொங்க் பீன்ஸ் என்ற பெயரும் உண்டு. இந்த பச்சைப் பயறு பல வகையான உணவுகளில் பெரிதும் பயன்படுகிறது. நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்திற்கும் மற்றும் மிகவும் ஜீரணமாகும் பருப்பு வகைகளில் பச்சைப் பயறுக்கு முக்கிய பங்கு உண்டு. இது நம் உலகில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பரவலாக பயரிடப்படும் முக்கியமான பயறு வகையாகும். மேலும் பச்சைப் பயறு 60 முதல் 90 நாட்களில் சீக்கிரமாக அறுவடை செய்யும் தன்மை கொண்டதாகும்.
பச்சைப் பயிரின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
பச்சைப் பயிரில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் காண்டீரியங்கள் போன்ற பல வகையான சத்துக்கள் அடங்கி உள்ளது. இவைகள் நம் உடலுக்கு தேவையான அதிகமான நன்மைகளை அள்ளித்தருகிறது. மேலும் நம் உடலில் செரிமானத்திற்கும் மற்றும் எடை இழப்பிற்கும் முக்கிய பங்கு அளிக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. இவற்றில் குறைந்த கொழுப்பு மற்றும் ஆரோக்கிய கார்போஹைட்ரேட்டுகள உள்ளது. மேலும் இந்த பச்சைப் பயிறு நம் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கும் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை முக்கிய பருப்பு வகைகளில் ஒன்றாகும். இந்த கொண்டைக்கடலை நம் சமையலில் அதிக அளவில் பயன்படும் ஒரு பருப்பாகும். இது இந்தியா மற்றும் பல பகுதிகளில் பெரிதளவில் பயன்படுகிறது. மேலும் கொண்டைக்கடலையை தானியமாகவும் மற்றும் முளை கட்டிய உணவு பொருளாகவும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம். கொண்டைக்கடலை 60 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய கூடியதாகும்.
கொண்டைக்கடலையின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
கொண்டைக்கடலையில் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள், உப்பச்சத்துக்கள் போன்ற என்னற்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. மேலும் இதில் உள்ள குறைந்த கொழுப்பு நம் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இது இதில் உடலுக்கு தேவையான நீர்த்தக்க ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. முளை கட்டிய கொண்டைக்கடலையில் இருமடங்காக சத்துக்கள் உள்ளது இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும் கொண்டைக்கடலை இரத்த சோகையை போக்கவும் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா
மொச்சை
மொச்சை நம் நாட்டின் கிராமப் பகுதிகளில் வளரும் ஒரு முக்கிய பயிராகும். இவை நம் வீட்டின் சமையலில் பரவலாக பயன்படுத்தும் ஒரு தானியமாக உள்ளது, இந்த மொச்சைகள் தானியமாகவும் மற்றும் பருப்பாகவும் பயன்படுகிறது. மொச்சையில் புரதச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடக்கி உள்ளது. மொச்சை நம் உடலுக்கு நலமிக்க ஒரு சத்து தானியமாகும்.
மொச்சையின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
மொச்சையில் புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் தயிர் மொச்சை மற்றும் பசுமையான மொச்சை என இரண்டு வகையான மொச்சைகள் உள்ளது. மொச்சை நம் உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருவதற்கும் மற்றும் உடல் வளர்ச்சி மற்றும் உடல் நலத்தை பராமரிப்பதற்கும் முக்கிய பங்கு இதற்கு உண்டு. மேலும் இந்த மொச்சை நம் உடலுக்கு பல வகையான நன்மைகளுக்கு காரணமாக அமைகிறது. இந்த மொச்சையை நாம் பல வகையான கூட்டு மற்றும் பொரியலாக செய்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்
எள்
எள் நம் ஆரோக்கியத்துக்கும் மட்டுமல்ல ஆன்மிகத்திற்கும் பயன்படும் ஒரு முக்கியமான ஒன்றாகும். இந்த பல ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவ குணங்களுக்காகப் பெரிதும் பயன்பட்டு வருகிறது. மேலும் இவற்றில் தனித்துவமான சுவைகள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது நம் நாட்டின் பாரம்பரிய பயிராக உள்ளது.
எள்ளின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
எள்ளில் கொழுப்புச்சத்துக்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற என்னற்ற சத்துக்குள் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் உருவாவதற்கு வளரும் செல்களை தடுப்பதற்கு பயன்படுகிறது. இந்த எள் ஆனது நம் உடலின் முடி மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இவைகள் நம் உடலுக்கு செரிமான பிரச்சைனைகளை தீர்க்கிறது. மேலும் இந்த எள் ஆனது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருதயத்தை பாதுகாக்க பெரிதும் காரணமாக அமைகிறது.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்
உளுந்து
உளுந்து தமிழகத்தின் முக்கிய பருப்பு வகைகளில் ஒன்றாக விளங்குகிறது நம்முடைய அன்றைய காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய தானியமாக உளுந்து உள்ளது. இந்த உளுந்துகள் நம்முடைய பாரம்பரிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தபடுகிறது. இது திராட்சை குடும்பத்தை சார்ந்த முக்கிய தானியமாக உளுந்து காணப்படுகிறது. மேலும் உளுந்து தென்னிந்திய உணவு முறையில் அதிகமாக பயன்படுகிறது. உளுந்தில் இது பல சத்துக்கள் அடங்கி உள்ளன. இதில் வெள்ளை உளுந்து மற்றும் கருப்பு உளுந்து என இரண்டு வகைகள் உள்ளது.
உளுந்தின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
உளுந்தில் புரதம், நார்ச்சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள் மற்றும் B வைட்டமின்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் இதில் உள்ளன. இவை அனைத்தும் நம் உடலுக்கு நிறைய பலன்களை தருகிறது. உளுந்து ஆனது இரத்த அழுத்தத்தை சீராக்கி, ஆக்ஸிஜன் பரிமாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்பெற செய்கிறது.மேலும் செரிமான பிரச்சனைகளை சரிச்செய்து இரத்த சுத்திகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க: பத்து சத்தான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்
கொள்ளு
கொள்ளு என்பது நெல் போன்ற தானிய வகையை சார்ந்ததாகும். இவை தென்னிந்திய உணவு வகைகளில் முக்கிய உணவுப்பொருளாக பயன்படுகிறது. இந்த கொள்ளு பலவிதான நன்மைகளுக்காகவும், அதன் சிறப்பு மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதளவில் நமக்கு உதவுகிறது.
கொள்ளின் சத்துக்களும் அதன் நன்மைகளும்
கொள்ளில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் மற்றும் அதிகளவில் கார்போஹைட்ரேட்களை கொண்டுள்ளது. இந்த கொள்ளுகள் நம் உடலில் உள்ள சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. மேலும் இந்த கொள்ளுகள் நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பதனால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிய மருந்தாக உள்ளது.
மேலும் இவை இரத்த பாதுகாப்புக்கு அதிகளவில் உதவுகிறது. இந்த கொள்ளுகள் செரிமானத்தை சரிச்செய்து உடலின் வெப்பத்தை தணிக்க பெரிதும் உதவுகிறது. கொள்ளில் ரசம், கூட்டு வகைகள் மற்றும் பொடி செய்தும் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்