நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்

நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்

நம்முடைய வாழ்வின் முக்கியமான ஒன்று உணவு ஆகும். மேலும் காய்கறிகள் நம் வாழ்க்கையில் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். இந்த காய்கறிகளை நாம் தினமும் உண்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான என்னற்ற ஊட்டச்சத்துக்கள் இதில் பெருமளவில் உள்ளது.

இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரும் உதவி புரிகிறது. மேலும் இந்த பதிவில் நம் உடலுக்கு அவசியமான முக்கியமான பத்து சத்தான காய்கறிகளின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்களை பற்றி விரிவாக காணலாம்.

நற்பலன்களை பத்து சத்தான காய்கறிகள்

  1. கேரட்
  2. முருங்கைக்காய்
  3. தக்காளி
  4. வெங்காயம்
  5. கிழங்குகள்
  6. கீரைகள்
  7. முட்டைக்கோஸ்
  8. பச்சை மிளகாய்
  9. பீட்ரூட்
  10. புடலங்காய்

கேரட்

பல சத்துக்கள் நிறைந்த மற்றும் எளிதில் வளரக்கூடிய காய்கறிகளில் கேரட் முக்கியமான ஒன்றாகும். இது ஆரஞ்சு நிறத்தை கொண்டிருக்கும். மேலும் இதில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளதால் நம் உடலுக்கு பலவித வழிகளில் நமைகளை அள்ளித் தருகிறது.

கேரட்டின் பயன்கள்

கேரட்டில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் போன்ற பலவித சத்துக்கள் அடங்கி உள்ளது. மேலும் கேரட் ஆனது நம் உடலில் உள்ள மூளை அழற்சிகளை தடுக்க பெரிதும் உதவுகிறது. மேலும் நம்முடைய சருமத்தை பொலிவாகவும் மற்றும் இளமையாகவும் வைத்திருக்க இந்த கேரட் ஆனது பயன்படுகிறது.

இந்த கேரட் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் நம்முடைய இருதயத்திற்கும் நன்மையை தருகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் உடலில் குடலின் இயக்கத்தை சீர் செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. கேரட்டில் பீட்டா-கரோட்டீன் என்ற பொருள் உள்ளது. இது நமக்கு இரவு நேரத்தில் வரும் கண் பார்வை பிரச்சனைகளை முக்கிய தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கிறது. மேலும் இந்த கேரட்டில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து வைக்கிறது.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்

முருங்கைக்காய்

முருங்கைக்காய் ஆனது தென்னிந்திய உணவுகளில் அதிமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான காய்கறி வகையாகும். முருங்கை மரத்தில் தோன்றும் இந்த முருங்கைக்காய் பலவித ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் மற்றும் இந்த மரத்தில் உள்ள பூ மற்றும் கீரைகள் மருத்துவ பயன்பாட்டிற்கும் முக்கிய பங்கினை அளிக்கின்றன.

முருங்கைக்காயின் பயன்கள்

முருங்கைக்காயில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற என்னற்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் கால்சியம் சத்துக்கள் எலும்புகளை பலமாக்க உதவி புரிகிறது. இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவைகள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

மேலும் முருங்கைக்காயில் உள்ள பொட்டாசியம் ஆனது இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு பெருமளவில் பயன்படுகிறது. இந்த முருங்கைக்காய் நம் உடலின் அழற்சிகளை குறைக்கவும் மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகிறது. மேலும் புற்றுநோய்க்கு வரும் செல்களை தடுப்பதற்கும் இந்த முருங்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்

தக்காளி

தக்காளி நாம் அனைவரும் அறிந்த உலகத்தில் மிகவும் பிரபலமான முக்கியமான காய்கறியாகும். சிவப்பு நிறத்தை கொண்டு இருக்கும் இந்த தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் அதிகளவு ருசியும் உள்ளது. இந்த தக்காளி நம் உடலுக்கு பல்வேறு விதமான வகைகளில் நன்மையை கொடுக்கிறது.

தக்காளியின் பயன்கள்

தக்காளியில் லைகோபீன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் நிறைந்து உள்ளது. இந்த தக்காளி கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தக்காளியில் லைகோபீன் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் பலவகையான நோய்கள் வராமல் தடுப்பதற்கு பெருமளவில் பயன்படுகிறது. மேலும் இது இருதய ஆரோக்கியத்திற்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவி புரிகிறது.

மேலும் இந்த தக்காளியில் நார்ச்சத்துக்கள் உள்ளதால் நமது உடலில் செரிமானத்தை சீர்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. மேலும் இந்த தக்காளியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை அதிகம் உண்டு. மேலும் தக்காளியில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளி தருகிறது. இதில் உள்ள அமிலங்கள் நம் உடலின் ஜீரணத்தை அதிகப்படுத்த பயன்படுகிறது.

மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

வெங்காயம்

உலகில் உள்ள உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு காய்கறி தான் இந்த வெங்காயம் ஆகும். இந்த அனைத்து விதமான சமையலிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடலுக்கு என்னற்ற நன்மைகளை கொடுக்கிறது.

வெங்காயத்தின் பயன்கள்

வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் குளுட்டத்தியோன் போன்ற நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. வெங்காயம் ஆனது நரம்பு மண்டலத்திற்கு மிகவும் ஏற்றது. மேலும் வெங்காயத்தில் உள்ள குளுட்டத்தியோன் ஆனது நம் உடலின் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

மேலும் இந்த வெங்காயத்தில் நார்ச்சத்துக்கள் நம் உடலின் செரிமானத்திற்கு ஊக்கப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க மிகவும் உதவுகிறது. வெங்காயத்தில் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெருமளவில் பயன்படுகிறது.

மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா

கிழங்குகள்

கிழங்குகள் நம் மண்ணுக்கு அடியில் ஒரு அற்புதமான தாவர வகையாகும். இதில் பலவகையான கிழங்கு வகைகள் இருக்கின்றன. இந்த கிழங்குளில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது உடலுக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளை நமக்கு தருகிறது.

கிழங்குகளின் பயன்கள்

கிழங்குகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் கிழங்குகளில் இருக்கிறது. பொதுவாக கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இந்த கிழங்குகள் பசியை தூண்டுவதற்கும் மற்றும் செரிமானத்தை அதிகப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

மேலும் இந்த கிழங்குகள் நம் உடலில் உள்ள சிறுநீரக கற்கள் சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. மேலும் இது இரத்த சோகையை தடுத்து நம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கிழங்குகளை அனைத்து சமையலிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். மேலும் இதில் உள்ள தாதுக்கள் நம்முடைய எலும்புகளையும் மற்றும் தசைகளையும் நன்கு வலுபெறச் செய்ய பயன்படுகிறது.

மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்

கீரைகள்

கீரைகள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளது. கீரைகளை நாம் அதிகமாக சமையலில் பயன்படுத்தி வருகிறோம்.

கீரைகளின் பயன்கள்

கீரையில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. கீரையில் கண் மற்றும் எலும்புகளை வலுப்பெறச் செய்கிறது. மேலும் இந்த கீரையானது இரத்த சோகையை தடுக்கவும் மற்றும் நம் உடலுக்கு தேவையான அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் முக்கிய காரணமாய் உள்ளது.

மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் அதிகமான நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு காய்கறியாகும். இந்த முட்டைக்கோஸ் குறுக்கு வெட்டு வடிவில் உள்ள காய்கறி ஆகும். இது நம் தென்னிந்திய சமையலில் அதிகமாக எல்லாவற்றிற்கும் பயன்படுத்தும் ஒரு முக்கிய காய்கறியாக இந்த முட்டைக்கோஸ் ஆனது உள்ளது.

முட்டைக்கோஸின் பயன்கள்

முட்டைக்கோஸில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த முட்டைக்கோஸ் இரத்த உறையலை அதிகப்படுத்தவும், செரிமானத்தை சீராக வைக்கவும் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் பெரிதும் உதவுகிறது.

மேலும் எடை இழப்புக்குக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பெருமளவில் பயன்படுகிறது. மேலும் இதில் உள்ளஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் செல் சேதத்தை காக்கிறது.

மேலும் படிக்க: சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் நாம் பயன்படுத்தும் சமையலில் முக்கியமான ஒரு காய்கறியாகும். இதில் தனித்துவமான சுவை மற்றும் வாசனை உள்ளது. மேலும் இதில் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. பச்சை மிளகாயில் உள்ள காரத் தன்மைக்கு காரணம் இதில் உள்ள காப்சைக்கின் என்ற வேதிப்பொருள் ஆகும். இதில் பலவிதமன ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன.

பச்சை மிளகாயின் பயன்கள்

பச்சை மிளகாயில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் காப்சைக்கின் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. மேலும்  இந்த பச்சை மிளகாய் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. மேலும் நோய்களின் தாக்கத்தையும் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும் செல்கள் சேதமடைவதையும் தடுக்கிறது. மேலும் மசாலா உணவுகளுக்கு இந்த பச்சை மிளகாய் பெருமளவில் சேர்க்கப்படுகிறது.

இதில் உள்ள காப்சைக்கின் என்ற வேதிப்பொருள் ஆனது உடலின் மெட்டாபாலிசத்தை அதிகப்படுத்த பெரிதும் பயன்ப்படுகிறது. இந்த மிளகாய் டயாபட்டீஸ் உள்ளவர்க்கு சிறந்த நிவாராணியாக உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நம்முடைய இருதயத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த பச்சை மிளகாயில் வைட்டமின்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்

பீட்ரூட்

பீட்ரூட்டில் தனித்துவமான சுவை மற்றும் நிறத்தால் சிறந்த ஒரு காய்கறியாக உள்ளது. மேலும் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது நம் உடலுக்கு பலவித நன்மையையும் மற்றும் ஆரோக்கியதையும் தருகிறது.

பீட்ரூட்டின் பயன்கள்

பீட்ரூட்டில் நைட்ரேட், பொட்டாசியம்,  வைட்டமின் மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்த சோகையைத் தடுப்பதற்கும், மலச்சிக்கல் பிரச்சனையை தடுத்து செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் பசியின்மையை தருவதால் உடல் எடை இழப்பதற்கு காரணமாக உள்ளது. மேலும் இதில் உள்ள நைட்ரேட் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்

புடலங்காய்

தமிழகம் முழுவதும் தோட்டங்களில் புடலங்காய் நன்கு பரவலாக பயரிடப்படுகிறது. இதில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கி உள்ளன. இது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

புடலங்காயின் பயன்கள்

புடலங்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. புடலங்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் நமது உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. புடலங்காய் வாத நீரை வெளியேற்றி மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியை சரி செய்கிறது.

புடலங்காயில் தாது சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவில் இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகை போக்கும் குணமும் இதற்கு உண்டு. குடல் புண்கள் மற்றும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கும் புடலங்காய் மிகவும் சிறந்தது. புடலங்காயில் நீர் சத்து அதிகமாய் இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

ஆரோக்கியம் தரும் முக்கிய பழங்கள் தெரியுமா

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply