ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்

ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது உணவு ஆகும். உணவு நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பதிவில் முக்கியமான வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் அந்த வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளின் வகைகளும் மற்றும் அந்த சாப்பாடுகளை செய்வதற்கான செய்முறைகளையும் பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்.

வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளின் வகைகள்

  1. தக்காளி சாதம்
  2. புளி சாதம்
  3. எலுமிச்சை சாதம்
  4. தேங்காய் சாதம்
  5. கருவேப்பிலை சாதம்
  6. பீட்ரூட் சாதம்
  7. கேரட் சுண்டல் சாதம்
  8. தயிர் சாதம்
  9. புதினா சாதம்
  10. ரச சாதம்

தக்காளி சாதம்

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் இந்த தக்காளி சாதமும் ஒன்றாகும். இந்த தக்காளியில் உள்ள புளிப்புச் சுவை மற்றும் அதனுடன் சேர்த்து மசாலாவும் சேரும் போது இந்த தக்காளி சாதத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உருவாகிறது.

செய்முறை:

தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் இவைகளை பொடி பொடியாக வெட்டிக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பொரிந்த உடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின் கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு வெட்டி வைத்த தக்காளியை அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும். அதன் பின் மிளகாய்த்தூள் தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்றாக வெந்தவுடன் வடித்த சாதம் சேர்த்து கிளறவும். பின்னர் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்

புளி சாதம்

இந்த புளிசாதம் ஆனது வைணவ கோயில்களில் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. மேலும் புளி சாதம் செய்வது மிகவும் எளிதாகும். இதில் புளி, வெந்தயம், கருவேப்பிலை மற்றும் தேங்காய் போன்ற பொருள்கள் கொண்ட தயாரிக்கப்படுகிறது. இந்த புளிசாதம் ஆனது சுவையாகவும் மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.

செய்முறை:

புளி சாதம் ஒரு எலுமிச்சை பழ அளவுக்கு புளி எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பின்பு ஒரு தேக்கரண்டி சீரகமும் அரை தேக்கரண்டி மிளகும் சேர்த்து வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். மேலும் வரமிளகாய், கருவேப்பிலை தேவைக்கேற்ப பூண்டு தோலுடன் தட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு போட்டு கடுகு நன்கு பொரிந்த உடன் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு தட்டி வைத்த பூண்டை சேர்த்து வதக்கவும். பூண்டு நன்கு வதங்கிய பின் ஊறவைத்த புளியை கரைத்து அதில் ஊற்றவும். புளி நன்கு கொதித்து வரும்போது உப்பு சேர்க்க வேண்டும் எண்ணெய் நன்கு பிரிந்து வரும்வரை கொதிக்க விடவும். அதன் பின்பு வடித்த சாதம் சேர்த்து கிளறவும். இந்த புளி சாதத்தில் வேர்க்கடலை சேர்த்தும் செய்யலாம் நன்றாக இருக்கும். புளி சாதத்துடன் உருளைக்கிழங்கு பொரியல் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க: நன்மைகளை அள்ளித் தரும் நவதானியங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க

எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதமானது புளி சாதத்துக்கு மாற்றாக அதை புளிப்புச் சுவையுடன் புத்துணர்ச்சி தரும் ஒரு சாதமாகும். இதுவும் எளிதாக செய்யக்கூடிய சாதம் ஆகும். இந்த எலுமிச்சை சாதம் நம் உடலுக்கு குளிச்சியை தருகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் காய்கறிகள் சேர்த்து எலுமிச்சை சாதத்தை நாம் சாப்பிடலாம்.

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெயை நன்கு சூடாக்கி அதில் கடுகு சேர்த்து கடுகு நன்கு வெடித்தவுடன் அதில் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, உளுந்து பருப்பு மற்றும் இஞ்சி போன்ற அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். மேலும் இதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியில் எலுமிச்சை சாற்றை கலந்து அதனுள் வேக வைத்த சாப்பாட்டையும் சேர்த்து நன்கு கிளறினால் சுவையான எலுமிச்சை சாதம் ரெடி.

மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா

தேங்காய் சாதம்

இந்த தேங்காய் சாதம் ஆனது பண்டிகை நாட்களில் மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகளும் செய்யக்கூடிய பாரம்பரிய உணவு ஆகும். மேலும் தேங்காய் பால் கறிவேப்பிலை மற்றும் மிளகு போன்ற பொருட்கள் மூலம் இந்த தேங்காய் சாதமானது தயாரிக்கப்படுகிறது. இந்த சாதமானது சுவையாகவும் மற்றும் மணமாகவும் இருக்கும்.

செய்முறை:

தேங்காய் சாதம் செய்வதற்கு இளம் தேங்காய் ஒன்றை எடுத்து துருவி கொள்ளவும். பின்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பெரிய வெங்காயம் பொடி பொடியாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு தேங்காய் எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும்.

நன்கு பொரிந்து வந்தபின் கருவேப்பிலை பெரிய வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு தேங்காய் துருவலுடன் உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர் எடுத்துப் பார்த்தால் சுவையான தேங்காய் சாதம் ரெடி. இந்த தேங்காய் சாதத்திற்கு ஊறுகாய் இருந்தாலே போதும் அவ்வளவு நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா

கருவேப்பிலை சாதம்

கருவேப்பிலையின் நறுமணமும் மற்றும் மிளகின் காரமும் சேர்ந்த சுவையானது கருவேப்பிலை சாதத்துக்கு உரிய தனிச்சிறப்பாகும். இதை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு சாதமாகும். மேலும் இந்த கருவேப்பிலையானது தாதுக்களை அதிகமாகக் கொண்டு உள்ளது. மேலும் இந்த கருவேப்பிலையானது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றதாகும்.

செய்முறை:

கருவேப்பிலை சாதம் செய்வதற்கு முதலில் கருவேப்பிலை விழுதை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கருவேப்பிலைகள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகு மற்றும் சீரகம் போன்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை தண்ணீருடன் சேர்த்து விழுதாக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு, அதில் உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு, மற்றும் கடுகு, கறிவேப்பிலைகளை போட்டு தாளிக்கவும். தாளித்த கலவையில் கருவேப்பிலை விழுதை போட்டு அதன்பின் நன்றாக வதக்கி அதில் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும். மேலும் இந்த கலவையை வேக வைத்த சாப்பாட்டில் நன்கு கிளறினால் அருமையான கருவேப்பிலை சாதம் தயார்.

மேலும் படிக்க: பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்

பீட்ரூட் சாதம்

பீட்ரூட் சாதம் ஆனது பார்ப்பதற்கு இரத்த நிறத்தை கொண்டிருக்கும். இந்த சாதத்திற்கு சிறப்பே இதன் வண்ணமாகும். இது தமிழகத்தின் தனித்துவமான சாதமாகும். மேலும் இதில் உள்ள இனிப்பு சுவை மற்றும் மசாலாக்களின் கலவை மிகவும் சுவையானதாகவும் இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்கின்ற காரணத்தால் இது நமது உடலுக்கு மிகவும் ஏற்றதாகும்.

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போன்றவைகளை நன்றாக வதக்கி கொள்ளவும். அதன்பின் வரமிளகாயையும் மற்றும் வெங்காயத்தையும் கலந்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கிய பின்பு அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, மேலும் அதில் வேக வைத்த சாப்பாட்டை நன்கு கிளறினால் சுவையான பீட்ரூட் சாதம் தயார்.

மேலும் படிக்க: ஒன்பது நவகிரகங்களின் முக்கியத்தை அறிந்து கொள்வோம்

கேரட் சுண்டல் சாதம்

கேரட் சுண்டல் சாதம் ஆனது மிகவும் சுவையான மற்றும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு சாதம் ஆகும். மேலும் கேரட்டின் இனிப்பு சுவை மட்டும் சுண்டலின் மணமும் சேர்ந்த கலவையே தனி ரகம் தான். மேலும் இந்த இரண்டிலும் சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. மேலும் இது குழந்தைகக்களுக்கு ஏற்ற சாதம் ஆகும்.

செய்முறை:

கேரட் சுண்டல் சாதம் கேரட்டை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும். அதில் வெங்காயம் மிளகாயை பொடி பொடியாக வெட்டிக் கொள்ளவும். சிறிது வெள்ளை சுண்டலையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கடலை பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்பு துருவிய கேரட் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கி வந்தவுடன் சுண்டலையும் உப்பு சேர்த்து வதக்கவும். அதன்பின் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கேரட் சுண்டல் சாதம் ரெடி.

மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

தயிர் சாதம்

தயிர் சாதம் ஆனது நமது தென்னிந்தியாவின் பழமையான மற்றும் முக்கியமான ஒரு சாதம் ஆகும். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவ்வளவு மிகவும் எளிதான ஒரு சாதம் ஆகும். இந்த சாதத்தை வெப்ப காலங்களில் அனைவருக்கும் வரும் சூட்டை தணிக்க உண்ணப்படும் ஒரு சாதம் ஆகும்.

செய்முறை:

தயிர் சாதம் செய்வதற்கு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, தாளித்த மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் போன்ற அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். மேலும் வேக வைத்த சாப்பாடு, இந்த வதக்கிய கலவை மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறினால் சுவையான தயிர் சாதம் தயார்.

மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்

புதினா சாதம்

புதினாவில் உள்ள நறுமணமும் மற்றும் குளிர்ச்சியும் நமக்கு புத்துணர்ச்சியை தரும் ஒரு சாதம் ஆகும். இது வெப்ப காலத்தில் சாப்பிட ஏதுவாக இருக்கும். மேலும் புதினா இலை முழுவதுமே அதிக சத்துக்கள் கொண்டுள்ளது. இது நமக்கு மிகுந்த பயனை அளிக்கிறது.

செய்முறை:

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் போன்றவற்றை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதன்பின் நறுக்கிய வெங்காயத்தை கலந்து நன்கு வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து மிருதுவாக வதக்கவும். மேலும் இதனுடன் புதினா விழுதை கலந்து 2 அல்லது 3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுத்தால் சுவையான புதினா சாதம் ரெடி.

மேலும் படிக்க: முகத்தை பொலிவுறச் செய்யும் டிப்ஸ்கள் தெரியுமா

ரச சாதம்

ரச சாதம் ஆனது நம்முடைய அனைத்து விதமான சைவ மற்றும் அசைவ உணவு சாப்பிடும் போது இடையில் எடுத்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய சாதம் ஆகும். மேலும் இந்த ரச சாதத்தை விரைவான நேரத்தில் செய்து விடலாம். இந்த ரசத்தில் பலவகையான வகைகள் உள்ளன. இது நம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தினை தரும் ஒரு சாதம் ஆகும்.

செய்முறை:

இந்த சாதம் புதிதாக இருக்கும் அரிசி மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடி பொடியாக வெட்டிக் கொள்ளவும் தேவைக்கேற்ப பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும். பூண்டை தோலுடன் தட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொரிந்த உடன் வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதை நன்றாக வதக்கியவுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் வதங்கியவுடன் புளித் தண்ணீரை சேர்த்து உப்பு சிறிதளவு போட்டு நுரை வந்ததும் இறக்கி வேகவைத்த பருப்பு சாற்றுடன் சேர்த்து கிளறவும். மேலும் அதனுடன் சிறிது சீரகம், மிளகு வறுத்து பொடி செய்து அதனுடன் சேர்த்து கிளறவும். மேலும் இதனுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ரச சாதம் தயார்.

மேலும் படிக்க: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளும் அதன் வரலாறும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply