பகவான் விஷ்ணு அவர்கள் இந்து சமயத்தின் முக்கியமான கடவுளும் மற்றும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளுளாக போற்றப்படுகிறார். மேலும் மூவுலகையும் காக்கும் கடவுளாக கருதப்படுகிறார் விஷ்ணு பகவான். அவர் இந்த பூவுலகில் பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். விஷ்னுவின் பத்து அவதாரங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமன அவதாரம்
- பரசுராமர் அவதாரம்
- இராமர் அவதாரம்
- பலராமர் அவதாரம்
- கிருஷ்ண அவதாரம்
- கல்கி அவதாரம்
மச்ச அவதாரம் – விஷ்ணுவின் முதல் அவதாரம்
மச்ச அவதாரம் என்பது விஷ்ணுவின் முதலாம் அவதாரமாகும். இந்த அவதாரம் ஒரு மீன் வடிவ அவதாரம் ஆகும். மச்சம் என்பது சமஸ்கிருத மொழியில் மீன் என்று அர்த்தம். இந்த அவதாரத்தில் விஷ்ணு அவர்கள் மேல் பாகம் தேவர் உருவம் போல கீழ்பாக்கம் மீனின் உருவம் போல தோன்றப்பட்டார் என்று புராணம் சொல்கிறது.
மச்ச அவதாரத்தின் கதை
உலகத்தில் ஒரு இக்கட்டான பிரளய காலத்தில் விஷ்ணு பகவான் அவர்கள் மீன் அவதாரம் எடுத்து இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களையும், மக்களையும் மற்றும் சப்த ரிஷிகளையும் இந்த உலகத்தில் இருந்து அனைவரும் காப்பாற்றினார்.
மேலும் படிக்க: ருசியூட்டும் வெரைட்டி ரைஸ் சாப்பாடுகளை தெரிந்து கொள்வோம்
கூர்ம அவதாரம் – விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம்
கூர்ம அவதாரம் விஷ்ணு பகவானின் இரண்டாவது அவதாரமாக கூறப்படுகிறது. கூர்மம் என்பது நம் தமிழில் ஆமை என்று பொருளாகும். இந்த அவதாரத்தின் போது விஷ்ணு பகவான் ஒரு மிகப்பெரிய ஆமையாக அவதரித்து ஒரு மந்திரம் மலையை தன் முதுகில் தாங்கி தேவர்களும் மற்றும் அசுரர்களும் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற பெரிய அளவில் உதவி புரிந்தார்.
கூர்மா அவதாரத்தின் கதை
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் அமிர்தத்தை பெறுவதற்காக மந்திர மலையை உபயோகப்படுத்தினர். அப்படி பயன்படுத்தும் போது மந்திரமலையானது கடலுக்கு அடியில் சென்று விடும். அப்படி கடலுக்கு அடியில் மூழ்காமல் இருக்க ஒரு அடித்தளம் தேவைப்பட்டது. கூர்ம அவதாரம் எடுத்து அந்த மந்திர மலையை முதுகில் தாங்கி தேவர்களும் மற்றும் அசுரர்களும் தங்கள் முயற்சியில் பெற பெருமளவில் உதவி புரிந்தார் விஷ்ணு பகவான்.
மேலும் படிக்க: வாழையில் இவ்வளவு நன்மைகளும் பயன்களும் உள்ளதா
வராக அவதாரம் – விஷ்ணு மூன்றாவது அவதாரம்
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் ஆகும். வராகம் என்பது ஒரு மிகப்பெரிய பன்றி என்று அர்த்தம். விஷ்ணு பகவான் அவர்கள் ஒரு மிகப்பெரிய பன்றி உருவத்தோடு இரண்டு தந்தங்களுடன் இந்த உலகத்தில் பிறந்தார்.
வராக அவதாரத்தின் கதை
இந்த அவதாரத்தில் பூமியை தன் கட்டுக்குள் கடலுக்கு அடியில் வைத்து வந்தான் இரன்யாட்சன் என்பவன். இவனை விஷ்ணு பகவான் பல ஆண்டுகள் போர் புரிந்து இறுதியாக கொன்றார். மேலும் பூமியை சூரிய குடும்பத்தில் வைத்து காத்தார். இதுவே வராக அவதாரம் ஆகும்.
மேலும் படிக்க: கோயம்புத்தூரில் இருக்கும் அழகான சுற்றுலா தலங்கள்
நரசிம்ம அவதாரம் – விஷ்ணுவின் நான்காவது அவதாரம்
விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் இந்த நரசிம்ம அவதாரமும் ஒன்றாகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு அவர்கள் மனித உடலையும் சிங்க தலையையும் கொண்டிருப்பார். இது ஒரு தெய்வத்தை குறிக்கும்.
நரசிம்ம அவதாரத்தின் கதை
இரணியகசிபு என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் பிரம்மனிடம் சாகாத வரத்தை பெற்றான். இதனால் தன்னை ஒரு கடவுள் என்று நம்பி உலகத்தை ஆண்டு வந்தான். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன் ஆவான். இந்த பிரகலாதன் விஷ்ணு பகவானின் தீவிர பக்தன் ஆவான். இவ்வாறு விஷ்ணுவை வழிபட்ட காரணத்தினால் தன் மகனை கொல்ல திட்டமிட்டான் இரணியகசிபு. ஆனால் பிரகலாதன் விஷ்ணுவின் அருளால் எந்த தீங்கும் இல்லாமல் தப்பித்து வந்தான்.
இதனால் கோபம் அடைந்த அந்த இரணியகசிபு அரண்மனையில் உள்ள தூணில் நீயா விஷ்ணு நீயா விஷ்ணு என்று எல்லா பக்கமும் சென்று பயங்கரமாக கத்தினான். அப்போது விஷ்ணு பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணில் இருந்து வெளிப்பட்டார். அப்போது அவனை தன் மடியில் வைத்து தன் கை நகங்களால் இரண்டாக பிளந்து பயங்கரமாக கொன்றார் நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணு பகவான் அவர்கள். இதுவே நரசிம்ம அவதாரம் தோன்ற காரணம் ஆகும்.
மேலும் படிக்க: சூரியனை சுற்றியுள்ள கோள்களை பற்றி தெரியுமா
வாமன அவதாரம் – விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம்
வாமன அவதாரம் என்பது விஷ்ணு பகவான் அவர்கள் எடுத்த தசாவதாரங்களில் ஐந்தாவது அவதாரம் ஆகும். வாமனன் என்ற பெயருக்கு குள்ளன் என்று அர்த்தம். பகவான் விஷ்ணு அவர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழிக்க அவரிடம் ஒரு மூன்று அடி நிலம் வேண்டும் என்ற கேள்வியை வைப்பார். இதில் விஷ்ணு அவர்கள் இந்த உலகில் அவர் எல்லை அற்றவர் என்ற பொருளை குறிக்கிறது.
வாமன அவதாரத்தின் கதை
மகாபலி சக்கரவர்த்தி என்று ஒருவன் இருந்தான். அவன் பிரகலாதனின் பேரன் ஆவான். அவன் ஒருநாள் கடுமையான தவம் செய்து தேவர்கள் மற்றும் அசுரர்களை வென்று, மூன்று உலகத்தையும் தன் கட்டுக்குள் வைத்து ஆண்டு வந்தான். இதனால் அவனுக்கு அகந்தை அதிகமாகியது. இதனால் இவனின் இந்த அகந்தையை அழிக்க விஷ்ணு பகவான் அவர்கள் ஒரு திட்டம் போட்டார். இதன் மூலம் விஷ்ணு ஒரு குள்ளனாக அவதாரம் எடுத்து அவனிடம் எனக்கு ஒரு மூன்று அடி நிலம் இடம் தாருங்கள் என்று கேட்டார். மகாபலி சம்மதம் சொன்னார். இதனால் விஷ்ணு பகவான் திருவிக்ரமன் வடிவம் பூண்டார்.
அப்போது விஷ்ணு ஒரு காலால் வானை நோக்கியும் மற்றொரு காலால் பூமியையும் அளந்தார். மேலும் மூன்றாவது அடியானது மகாபலியின் தலையில் படப்பட்டது. இதன் மூலம் தன் அகந்தை அழிய பட்டார் மகாபலி. மேலும் அவர் விஷ்ணு பகவனிடம் வணங்கி தான் இந்த பாதாளலோகத்தில் அரசனாக இருக்க தாங்கள் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். விஷ்ணுவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
பரசுராமர் அவதாரம் – விஷ்ணுவின் ஆறாம் அவதாரம்
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக இந்த பரசுராமர் அவதாரம் கூறப்படுகிறது. இந்த அவதாரத்தில் விஷ்ணு பகவான் ஒரு பிராமணராகப் பிறந்து கடுமையான தவம் செய்து சிவபெருமானிடம் அருளை பெற்று அவரிடம் இருந்து ஒரு கோடாரியைப் பெற்றார். இதன் மூலம் பல க்ஷத்திரியர்களை அழித்த காரணத்தால் பரசுராமர் என்ற பெயரால் அழைக்கபட்டார்.
பரசுராமர் அவதாரத்தின் கதை
பரசுராமர், ஜமதக்னி முனிவர் மற்றும் ரேணுகா தேவிக்கு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். மேலும் இவர் தந்தையின் சொல்லை மதிப்பவர். இதனால் ஒரு நாள் தன் தந்தையின் கோபத்துக்கு ஆளான ரேணுகா தேவியின் தலையை வெட்டுமாறு ஜமதக்னி முனிவர் சொன்ன ஒரு காரணத்தால் தன் தாயின் தலையை யோசிக்காமல் வெட்டினார். பின்னர் தந்தையின் வரத்தால் தாயை காப்பாற்றினார்.
மேலும் க்ஷத்திரியர்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பிராமணர்களை மிகவும் கொடுமை படுத்தி வந்தனர். இதனால் மிகவும் கோவம் கொண்ட பரசுராமர் அவர்கள் கடும் தகவம் புரிந்து சிவப்பெருமானிடம் ஒரு கோடாரியைப் பெற்று அனைத்து க்ஷத்திரியர்களையும் கொன்று வீழ் த்தினார். இதுவே விஷ்ணுவின் பரசுராமர் அவதாரம் தோன்ற காரணம் ஆகும்.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்வோம்
இராமர் அவதாரம் – விஷ்ணுவின் ஏழாம் அவதாரம்
இராமர் அவதாரம் விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரம் ஆகும். தசரத மன்னனின் முதல் மகனாக அயோத்தியில் பிறந்தவர் தான் இந்த இராமர். தன் தந்தையின் வாக்குப்படி வனவாசம் சென்று வந்தார். தன் மனைவி சீதையை இராவணன் கடத்திய காரணத்தால், இராவணனை வதம் செய்து சீதையை அயோத்தியில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.
இராமர் அவதாரத்தின் கதை
இராமரின் வாழ்க்கை வரலாறு இராமாயணம் என்ற மிகப்பெரிய இதிகாசத்தில் விரிவாக சொல்லப்படுகிறது. இராமாயணம் என்ற இதிகாசத்தில் இராமரைப் பற்றி நிறைய கதைகள் இருக்கிறது. இந்த கதையில் தன் தந்தையின் வாக்குபடி இராமர் அவர்கள் தன் மனைவி மற்றும் தம்பியுடன் வனவாசம் செல்கிறார். அப்பொழுது தன் மனைவி சீதையை ராவணன் கவர்ந்து சென்று விடுகிறான். இதனால் அவனை அழிக்க இராமர் பலரின் உதவியின் மூலம் ராவணனை கொன்று சீதையை காப்பாற்றினார்.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை அதிகமாக தரும் அற்புத மாதுளை பழம்
பலராமர் அவதாரம் – விஷ்ணுவின் எட்டாம் அவதாரம்
விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரமாக பலராமர் அவதாரம் சொல்லப்படுகிறது. இவர் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணனின் மூத்த சகோதரராகவும் மற்றும் ஆதிசேஷனின் அவதாரமாகவும் அழைக்கப்படுகிறார். பலராமர் கலப்பையை ஆயுதமாகக் கொண்டுள்ளவர். மேலும் விவசாயிகளின் தெய்வமாகவும் அழைக்கப்படுகிறார்.
பலராமர் அவதாரத்தின் கதை
பலராமர் அவர்கள் கிருஷ்ணன் அவதரித்த காலத்திலே யது குலத்தில் பிறந்தவர். இவர் கிருஷ்ணனின் தாயாகிய தேவகியின் சகோதரி ரோகிணியின் மகன் ஆவார். கிருஷ்ணனைப் போலவே பலராமரும் கம்சனின் கொடுமைகளுக்கு ஆளானவர். மேலும் அந்த கொடுமையில் இருந்து தப்பி கோகுலத்தில் வளர்ந்தார் பலராமர். மேலும் இவர் கிருஷ்ணனுடன் இணைந்து கம்சனை வதம் செய்தார். அதன்பின் யாதவர்கள் குலத்தையும் காப்பாற்றினார்.
மேலும் படிக்க: நற்பலன்களை அள்ளித்தரும் பத்து சத்தான காய்கறிகள்
கிருஷ்ண அவதாரம் – விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரம்
விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரம் தான் இந்த கிருஷ்ண அவதாரம் ஆகும். இவர் பகவத் கீதையின் மற்றும் பக்தி இலக்கியங்களின் மையக் கதாபாத்திரமாக விளங்கி உள்ளார். கிருஷ்ணன் தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே கோகுலத்தில் வளர்ந்தார். மேலும் இதனால் கோபிகளின் இதயத்தை கொள்ளை கொண்டான் கிருஷ்ணன். இதனால் கோபிகளின் கண்ணன் என்றும் கிருஷ்ணன் அழைக்கப்படுகிறான்.
கிருஷ்ண அவதாரத்தின் கதை
நம் உலகில் அதர்மம் அதிகமாக பெருகி வந்த காரணத்தால் அதை ஒழிக்கவும் மற்றும் தர்மத்தை நிலைநாட்டவும் விஷ்ணு பகவான் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்தார். கிருஷ்ணனின் அவதாரம் தோன்ற முக்கிய காரணம் கம்சன் என்ற அசுரன் யாதவ குலத்தை அழிப்பதற்கு திட்டம் தீட்டினான். இதனால் அந்த கமிஷனை அழித்து யாதவ குலத்தை காப்பாற்றுவதற்கும் மேலும் பகவத் கீதை மூலம் உலகிற்கு உபதேசம் செய்வதற்கும் கிருஷ்ணன் அவதரித்தார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது தெரியுமா
கல்கி அவதாரம் – விஷ்ணுவின் பத்தாம் அவதாரம்
கல்கி அவதாரம் என்பது விஷ்ணு பகவானின் பத்தாவது மற்றும் இறுதியான அவதாரமாக கூறப்படுகிறது. இது விஷ்ணுவின் எதிர்கால அவதாரமாக சொல்லப்படுகிறது. கல்கி அவதாரம் பற்றிய மேலும் விவரங்கள் விஷ்ணு பகவானின் புராணத்தில் சொல்லப்படுகிறது. இந்த உலகில் கல்கி பகவான் தோன்றி எல்லா அனைத்து விதமான தீயவைகளையும் அழிப்பார் என்ற ஒரு கூற்று உள்ளது. கல்கி அவதாரம் எங்கு எப்போது நிகழும் என்பது குறித்தும் பல விதமான கருத்துக்கள் உலாவி வருகின்றன.
மேலும் படிக்க: பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து கொள்வோம்